தையல் மெஷினை இப்படி சுத்தம் செய்யுங்கள்..! மெஷின் நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் இருக்கும்..!

Advertisement

Sewing Machine Cleaning in Tamil

தையல் இயந்திரத்தை தாமஸ் செயின்ட் என்பவர் 1790 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அக்காலத்தில் மனிதன் தாவர இலைகளையும் விலங்கின் தோலையும் ஒழுங்கற்ற முறையில் அணிந்து வந்தனர். அப்போது விலங்கின் தோலை தைப்பதற்காக ஒரு கருவி ஒன்றை கண்டுபித்து உள்ளனர். அக்கருவி வளர்ச்சியடைந்து இப்போது தையல் இயந்திரமாக உள்ளது. இப்போது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் தையல் மெஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தையல் இயந்திரத்தை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறமோ அந்த அளவிற்கு சுத்தமாகவும் வைத்து கொள்வது அவசியம். இல்லையெனில் தையல் இயந்திரம் விரைவில் பழுதடைந்து விடும். எனவே தையல் இயந்திரம் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில், தையல் இயந்திரத்தை எவ்வாறு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Sewing Machine Maintenance Tips in Tamil:

தையல் மெஷினுக்கு எண்ணெய் விடுதல்:

 how to clean a sewing machine in tamil

தையல் இயந்திரம் விரைவில் பழுதடையாமல் இருக்க தையல் இயந்திரத்திற்கு எண்ணெய் போடுதல் அவசியம். அதாவது ஊசி செட் செய்யும் இடம், பாபின், மற்றும் நூல் போடும் வட்டு போன்ற இடங்களில் தினமும் எண்ணெய் போடுதல் அவசியம்.

பேக்கிங் சோடா பயன்படுத்துதல்:

 sewing machine cleaning in tamil

தையல் மெஷினில் உள்ள இரும்பு துருவை நீக்க, ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள். பிறகு, இத்தண்ணீரில் ஒரு துணியை நனைத்து துரு உள்ள இடத்தில் நன்றாக துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். 

இவ்வாறு செய்வதன் மூலம் தையல் இயந்திரத்தில் உள்ள இரும்பு துருவை எளிதில் நீக்கி விடலாம்.

பெடல்களை சுத்தம் செய்தல்:

தையல் இயந்திரத்தின் பெடல்களை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். இப்போது ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் அல்லது மெஷின் ஆயிலை எடுத்து கொள்ளுங்கள். பிறகு, ஒரு துணியில் இந்த ஆயிலை நனைத்து பெடல்களின் எல்லா பகுதிகளையும் துடைத்து சுத்தம் செய்து விடுங்கள்.

அதன் பின், பெடல்களில் திருகு உள்ள இடத்தில் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது மெஷின் ஆயிலை விடவும்.

தையல் மிஷின் பாகங்கள் | Tailoring Machine Parts Name in Tamil

பவர் மெஷின் சுத்தம் செய்தல்:

 sewing machine maintenance tips in tamil

பவர் மெஷின் என்று சொல்லப்படும் எலக்ட்ரானிக் தையல் மெஷினை சுத்தம் செய்வதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து ஒரு காட்டன் துணியில் நனைத்து மெஷினை துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

மெஷின் நன்றாக உலர்ந்ததும், ஒரு காட்டன் துணியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இயந்திரம் முழுவதும் துடைத்து விடுங்கள்.

துணிகளுக்கு ஏற்ப ஊசியை பயன்படுத்தவும்:

 தையல் மெஷின் சுத்தம் செய்வது எப்படி

ஒவ்வொரு விதமான ஆடைகளை தைக்க வெவ்வேறு ஊசிகள் உள்ளன. எனவே துணிகளின் தரத்திற்கு ஏற்றவாறு ஊசியை பயன்படுத்தி தைப்பது அவசியம். மேலும், துணியை தைக்கும்போது கடினமாக பிடித்து இழுக்க கூடாது. அவ்வாறு செய்தால் மெஷினிற்கு சேதம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், துணி கிழிந்துவிடவும் வாய்ப்பு உள்ளது.

வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..?

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement