How To Prevent Dry Lips In Summer In Tamil
கோடைக்காலத்தில் உடலை பாதுகாப்பதே பெரிய வேலையாய் இருக்கிறது. அதுவும் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் சூடு காரணமாக வயிற்று வலி, தலைவலி என உடல் உபாதைகள் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் கொளுத்தும் கோடை வெயிலில் உடலை பாதுகாக்க ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருங்கள். உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். ஆனால் கோடைக்காலத்தில் வறண்டு போகும் உதட்டை காப்பாற்றுவது எப்படி என எல்லோருடைய மனதிலும் ஒரு கவலை இருக்கும். கோடை காலத்திலும் உதடுகளை அழகாய் வைத்திருக்க சில டிப்ஸ்
மாதுளைபழம் :
உதடுகள் வறண்டு போகாமல் சிவப்பு நிறத்தில் மினு மினுப்பாக இருக்க மாதுளைபழம் உதவியாக இருக்கும். மாதுளையில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் தண்ணீர் சத்து நிறைந்தவை. அதனால் மாதுளை சாறை உதடுகளில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவி விட வேண்டும். இதனால் உங்கள் உதடு கோடையிலும் ஈரப்பதத்தோடு பிங்க் நிறத்தில் பளபளக்கும்.
கொழுப்பு நிறைந்த பால் :
கொழுப்புகள் நிறைந்த புல் க்ரீம் மில்க் அல்லது தண்ணீர் சேர்க்காத திக்கான பசும்பாலின் ஆடை இவற்றுள் ஏதாவது ஒன்றை உதட்டில் தடவி வர எளிதில் உதடு வறண்டு போகாது. உதடு வறட்சியின் காரணமாக சிலருக்கு உதட்டில் தோல் உரிந்து எரியும். அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் யூஸ் புல்லாக இருக்கும். உதடும் நாளடைவில் அழகாக மாறி விடும்.
தேன் :
தேனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து உதட்டில் தேய்த்து 5 நிமிடம் கழித்த பின் கழுவி விட வேண்டும். இவ்வாறு கோடைக்காலத்தில் செய்து வர உதடு அழகாக சாஃப்டாக மாறிவிடும். உதட்டின் நிறமும் மாறி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
நீர்ச்சத்து நிறைந்ததை உட்கொள்ள வேண்டும் :
உதடுகள் அழகாக வேண்டும் என்றால் முதலில் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் உள்ள சூடுகள் சிறுநீர் வழியாக வெளியேறி உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் உதடும் வறட்சி அடையாமல் நீரேற்றத்துடன் காணப்படும். அதே போல் கோடைக்காலத்தில் நீர் சத்துக்கள் நிறைந்த பழங்கள் காய்கறிகளாக உட்கொள்வது இன்னும் சிறப்பு. இதனால் உதடு மட்டுமல்ல உடலும் அழகாக ஆகி விடும்.
கற்றாழை ஜூஸ் மற்றும் வெள்ளரி ஜூஸ் :
கோடைக்காலத்தில் கற்றாழை ஜூஸ் மற்றும் வெள்ளரி ஜூஸ் குடிப்பதால் உடல் குளிர்ச்சியாகி உதடு ஈர்ப்பதகமாக மாறிவிடும். இதனால் உதட்டில் தோல் உரிவது வறண்டு போவது இதெல்லாம் சரியாகி விடும். இதனால் உங்கள் உடலுக்கும் நன்மை அதிகம்.
கோடைக்காலத்தில் முடியை பராமரிப்பது எப்படி.?
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |