வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் சமயலறையில் பல்லி இருக்கிறதா? விரட்டுவது எப்படி ?

Updated On: April 3, 2026 5:16 PM
Follow Us:
paligalai viratuvadhu eppadi
---Advertisement---
Advertisement

Veetil Palli Varamal Iruka

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் பல்லி நடமாட்டம் இருப்பது  சகஜம். பேய்களை பார்த்து கூட பயப்படாத பெண்கள் பல்லிகளை பார்த்து தான் அதிகம் பயப்படுகிறார்கள். சில நேரம் பல்லிகள் ஒன்றுக்கொன்று சண்டைபோட்டுக்கொண்டு மேலே வந்து விழுந்து விடும். அந்த நேரத்தில் மிகவும் அச்சமாக இருக்கும். நம் மீது விழுந்தாலும் தட்டி விட்டுடலாம். சாப்பாட்டில் விழுந்துவிட்டால் என்ன செய்வது. அது பெரிய ஆபத்தை தந்துவிடும். பெரும்பாலும் பள்ளிகள் சமையலறையில் தான் அதிகம் இருக்கின்றன. இதனை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் பல்லி சாப்பாட்டிலோ குடிக்கும் டீ , பால் போன்றவற்றில் விழுந்தால் அது தெரியாமல் நாமும் சாப்பிட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். பல்லியை எப்படி வீட்டில் இருந்து விரட்டியடிப்பது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

பல்லி வராமல் தடுக்க என்ன செய்யலாம் :

palli veetil irundhu viratuvadhu

பல்லிகள் மிகவும் விஷத்தன்மை உடையவை. சில பேர் பல்லிகள் வீட்டில் இருப்பது நன்மை என நினைத்து அது வராமல் இருக்க எந்த தடுப்பு முயற்சியும் எடுக்க மாட்டார்கள். இது உண்மையில் நல்லதல்ல இப்படி செய்தால் பல்லிகள் வீட்டில் பெருகிவிடும். இப்படி பல்லிகள் வீட்டில் பெருகிவிட்டால் மேலே விழுவது சாப்பாட்டில் விழுவது என் இடையூறுகளை ஏற்படுத்தும். சிலர் பல்லி உடலில் எங்காவது விழுந்து விட்டால் உடனே என்ன பலன் என ஆராய்ந்து அந்த நாளை இதை வைத்தே ஓட்டி விடுவார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பல்லிகளை கொலை செய்ய வேண்டாம். வீட்டிற்குள்  பல்லிகளை வராமல் தடுத்தால் போதும். அதனை விரட்டுவது எப்படி என பார்ப்போம்.

முதல் நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு பச்சை மிளகாய் காம்புகளை நீக்கி விட்டு பச்சை மிளகாயை போட்டு கொள்ளுங்கள். அதோடு கொஞ்சமாக இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள். மறுநாள் இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எங்கு எல்லாம் பல்லிகள் நடமாடும் இடமோ அங்கெல்லாம் ஸ்ப்ரே அடித்து விடுங்கள். குறிப்பாக சமயலறையில் மூளை முடுக்கில் எல்லாம் அடித்து விடுங்கள். இப்படி செய்தால் பல்லிகள் இந்த வாசனையை கண்டு பயந்து வீட்டை விட்டு வெளியேறி விடும்.

பல்லி எச்சம் குணமாக வீட்டு வைத்தியம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!