மிக்சியில் எதெல்லாம் அரைக்க கூடாது தெரியுமா.?

Advertisement

மிக்சியில் இதை எல்லாம் அரைக்க கூடாது 

நம் முன்னோர்களின் காலத்தில் சட்னி அல்லது குழம்பிற்கு தேவையான பொருட்களை அரைக்க வேண்டுமென்றால் அம்மியில் தான் அறைத்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அம்மியில் யாரும் பயப்படுத்துவதில்லை, இன்னும் சொல்ல போனால் எல்லார் வீட்டிலும் அம்மி இருக்கிறதா என்றே தெரியவில்லை. அனைவரின் வீட்டிலும் மிக்சியை தான் பயன்படுத்துகிறார்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைப்பது முதல் பருப்பு வகைகளை அரைப்பது வரைக்கும் எல்லாத்துக்கும் மிக்சியை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த மிக்சி ஆனது சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. இதற்கு காரணம் நீங்கள் தான்.

ஏனென்றால் சில பொருட்களை அரைக்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது, அதனை மீறி அரைக்க கூடாது. அப்படி அரைப்பதால் தான் மிக்சி சீக்கிரம் வீணாகிறது. இந்த பதிவில் என்னென்ன பொருட்களை எல்லாம் அரைக்க கூடாது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

காய்கறிகள்:

மிக்சியில் எதெல்லாம் அரைக்க கூடாது 

மிக்சி ஜாரில் காய்கறிகளை போட்டு அரைக்க கூடாது என்பதல்ல, இந்த காய்கறிகளை சின்ன சின்ன பீஸ் ஆக கட் செய்து அரைக்க வேண்டும். அதன் பிறகு பார்த்தால் நார் உள்ள காய்கறிகளை போட்டு அரைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நார் உள்ள காய்கறிகளை போட்டு அரைக்கும் போது பிளேடில் சிக்கி கொள்ளும். இதனால் மோட்டார் வீணாகி விடும்.

பருப்பு வகைகள்:

கடினமான கொட்டை வகைகளை அரைக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் கடினமாக இல்ல கொட்டை வகைகளை அரைக்கும் போது பிளேடில் அழுத்தம் கொடுத்து பிளேடு வீணாகி விடும்.

சூடான பொருட்கள்:

மிக்சியில் எதெல்லாம் அரைக்க கூடாது 

பொதுவாக மிக்சியில் சூடான பொருட்களை சேர்த்து அரைக்க கூடாது. அப்படி அரைக்கும் போது மோட்டார் ஆனது சீக்கிரம் வீணாகி விடும்.

கிழங்கு வகைகள்:

கிழங்கு வகைகளை மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்க கூடாது. இதில் நீங்கள் தண்ணீர் சேர்த்து அரைக்கும் போது மாவு போல ஒட்டி கொள்ளும். இதனால் மிக்சி ஜாரின் பிளேடு ஆனது சீக்கிரம் வீணாகி விடும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement