Follow Cultivate Positive Thoughts in Tamil
ஹலோ நண்பர்களே..! இன்றைக்கு நாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஓன்று தான் நேர்மறை எண்ணங்கள். ஒருவருக்கு நேற்மறை எண்ணம் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை நம்மால் சந்தோஷமாக வாழமுடியும். ஆனால் நமக்கு ஏதாவது சிறிய கஷ்டம் வந்தாலும் நம்மால் நேர்மறை எண்ணங்களை யோசிக்க முடியாது. ஆகையால் இந்த பதிவின் வாயிலாக நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
நேர்மறை எண்ணங்கள் வளர:
பொதுவாக நேர்மறை எண்ணங்கள் வளர வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (Positive Thinking) என்று சொல்லப்படுகிறது.
அதாவது நேர்மறை எண்ணங்கள் என்பது நல்லதே நடக்கும், அனைத்தும் சரியாக நடக்கும், நடப்பவை நன்மைக்கே என்று எண்ணங்களை வளர்ப்பதே நேர்மறை எண்ணங்கள் என்று கூறப்படுகிறது. ஆகையால் ஒரு மனிதன் இதுபோன்ற எண்ணங்களை தான் வளர்த்து கொள்ள வேண்டும்.
அதுபோல எதிர்மறை எண்ணங்களுடன் சிலர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது எது நினைத்தாலும் அதை எதிர்மறையாக (Negative) தான் நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்கள் நேர்மறை எண்ணங்களை கண்டிப்பாக வளர்த்து கொள்ள வேண்டும். ஆகையால் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
நேர்மறை எண்ணம் கொண்டவர்கள்:
பொதுவாக நாம் எப்பொழுதும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் பழக வேண்டும். உங்களுடன் இருப்பவர்கள் நேர்மறை எண்ணம் கொண்டவராக இருக்கிறார்களா என்று பாருங்கள். அப்படி நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் உங்களுடன் இருந்தால் என்ன பயன் தெரியுமா..?
- அவர்கள் உங்களுக்கு ஆதரவாக நல்ல அறிவுரைகளை கூறுவார்கள்.
- உங்கள் கருத்துக்களை காதுகொடுத்து கேட்டு உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள்.
- உங்களுக்கு துணையாக நின்று உங்களை வழிநடத்துவார்கள்.
- அவர்களிடம் முடியாது, நடக்காது என்ற வார்த்தையே இருக்காது.
எனவே இதுபோல நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களுடன் பழகுங்கள்.
நேர்மறையான எண்ணமிருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்
நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ளுங்கள்:
எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் மனதை நகைச்சுவை உணர்வுடன் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களுடன் பேசும் போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசுங்கள். இதனால் உங்களை சுற்றி நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். அதுமட்டுமில்லாமல், வாழ்க்கையில் முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. மன அழுத்தம் நேர்மறை எண்ணங்களுக்கு எதிரி, ஆகவே எப்பொழுதும் நகைச்சுவை உணர்வுடன் இருங்கள்.
எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்:
பொதுவாக நம்மை சுற்றி நிறைய எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அப்படி இருப்பவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து விலக்கி விடுங்கள். அதாவது உன்னால் முடியாது, நடக்காது என்று எதிர்மறையாக பேசும் நபர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள். அப்படி இருப்பவர்கள் உங்களை வாழ்க்கையில் முன்னேற விட மாட்டார்கள். ஆகவே அவர்களால் உங்களுக்கு மன அழுத்தம் தான் அதிகரிக்குமே தவிர முன்னேற்றம் இருக்காது.
உதவும் எண்ணம்:
பொதுவாக ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய மிகப்பெரிய குணமே மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் தான். எப்பொழுதும் எதிர்மறையாக நினைத்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, மற்றவர்களுக்கு உதவ முயற்சி செய்யலாம். அப்படி உதவி செய்யும் போது உங்கள் மனதிற்கு திருப்தி கிடைக்கும். ஆகையால் மற்றவர்களுக்கு உதவ முயற்சி செய்யுங்கள்.
அதுபோல நீங்கள் ஒருவருக்கு காசு பணம் கொடுத்து தான் உதவ வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் அவர்களுக்கு நேர்மறையான வார்த்தைகளை கூறியும் அவர்களை வழிநடத்தலாம்.
நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்:
அதுபோல நீங்களே உங்களுக்குள் நேற்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். அதாவது எப்பொழுதும் கெட்டதை பற்றி நினைக்காமல், நல்லதை நினைத்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். எதுவாக இருந்தாலும் உங்களால் முடியும் என்று நம்புங்கள். உங்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று நினையுங்கள். இதுபோல நீங்கள் நேர்மறையாக நினைக்கும் போது உங்களுக்கு நல்லதே நடக்கும்.
வெற்றியை அடைவதற்கான 6 வழிகள்..
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |