தோல்விக்கான காரணமும் அதிலிருந்து வெளியே வருவது எப்படி.?

Advertisement

தோல்விக்கான காரணம் 

மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக தாங்கள் அனைவரும் எதையாவது ட்ரை செய்வார்கள். அப்படி ட்ரை செய்யும் செயல்கள் ஆனது தோல்வியில் முடிந்தால் மனம் சோர்ந்து விடுவார்கள். இந்த தோல்வியிலிருந்து வெளியே வந்தால் தான் அடுத்ததை பற்றி யோசிக்க முடியும். அதனால் தான் இந்த பதிவில் தோல்விக்கான காரணமும், அதற்கான வழிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

தோல்விக்கான காரணம் அதிலிருந்து வெளியே வருவது எப்படி:

How to Overcome Failure in life in tamil

ஒருவர் முதலாவதாக ஏதாவது செய்ய போகிறார் என்றால் அதில் தோல்வியில் முடிந்தால் அதனையே நினைத்து வருத்தப்படுவார்கள். இதனால் மறுவேலையை அவர்களால் செய்ய முடியாது.

உங்களின் தோல்வியை மறந்து விடுவது நல்லது, ஏனென்றால் அப்போது தான் நீங்கள் அடுத்ததை பற்றி யோசிக்க முடியும். ஆனால் எப்படி தோல்வி அடைந்தோம் என்பதை மறக்க கூடாது. நீங்கள் செய்த முயற்ச்சியில் ஏதோ ஒரு இடத்தில் தவறு செய்திருப்பீர்கள், அந்த இடத்தை நீங்கள் மறந்திருக்க கூடாது. அப்போது தான் மறுதடவை செய்யும் போது அந்த தவறை செய்ய மாட்டீர்கள்.

நம்மால் எந்த செயலையும் செய்ய முடியாது, நாம் எதற்கும் லாயக்கு இல்லை என்ற எண்ணம் வந்து விடுகிறது. மேலும் இதனையே நினைத்து சோர்ந்து விடுவார்கள். தோல்வியில் இருக்கும் பயத்தினால் தான் அடுத்த காரியம் செய்ய முடிவதில்லை. அதனால் தோல்வியில் இருக்கும் பயத்தை தூக்கி போடுங்கள்.

நீங்கள் தோல்வி அடைந்தால் வேறு ஓன்று உங்களுக்காக காது இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

தோல்வி என்பதை ஒரு அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஏற்கனவே செய்த செயலில் தோல்வியை அடைந்திருந்தால் அதில் நாம் எதனால் தோல்வியை அடைந்தோம் என்பதை ஆராய வேண்டும்.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும், அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட வேண்டும். நீங்கள் தோல்வி அடைந்ததை நினைத்து மனம் தளராமல் எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் அடுத்த வேலையை பற்றி சிந்திப்பீர்கள், இதனை வெற்றியை அடைவீர்கள்.

வெற்றியை அடைவதற்கான 6 வழிகள்..

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement