வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கான டிப்ஸ்
பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு முன்பு வேலைக்கு சென்றிருப்பார்கள். இந்த வேலையை பலரும் திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு சென்றிருப்பார்கள், சில பேர் வேலைக்கு சென்றிருக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் எல்லாம் வந்த பிறகு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் வேலைக்கு செல்வதற்கு சில டிப்ஸ் பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
திறமை:
திருமணத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வரும் போது ஏதோ ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருக்க கூடாது. உங்களின் திறமைக்கும், படிப்பிற்கும் ஏற்ற வேலையாக தான் பார்க்க வேண்டும்.
ரெஸ்யூம்:
உங்களுடைய ரெஸ்யூமை Update செய்ய வேண்டியிருக்கும், சில பேர் படித்ததை மட்டும் வைத்திருப்பார்கள். அவர்களுடைய வேலையின் அனுபவத்தை Update செய்திருக்க மாட்டார்கள். அது போல நீங்கள் நீண்டஇடைவெளியில் ஏதும் Corse அல்லது வேறு ஏதும் படித்திருப்பீர்கள் அதனை பற்றியும் Update செய்திருக்க வேண்டும்.
Update:
நீங்கள் செய்யும் வேலைக்கு தகுந்தது போல Update செய்து கொள்ள வேண்டும். புதிய புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்று கொள்ள வேண்டும். உங்களுடைய அறிவை நாளுக்கு நாள் வளர்த்து கொள்ள வேண்டும்.
தைரியம்:
நீங்கள் வேலைக்கு Interview போகிறீர்கள் என்றால் ரொம்ப நாளைக்கு அப்புறம் செல்கிறீர்கள் என்ற தயக்கம் இல்லாமல் தைரியமாக செல்ல வேண்டும். உங்களுடைய அறிவு மற்றும் தைரியம் இவை இரண்டையும் மட்டும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே வேலை பார்த்திருந்தீர்கள் என்றால் அதனை பற்றிய தகவலை தெளிவாக கூற வேண்டும்.
புதிய வேலை:
நீங்கள் புதிய வேலையில் சேர்ந்ததும் அங்குள்ள நபர்களிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேலைக்கு சென்ற இடத்தில் உங்களுடைய வயதுக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருப்பார்கள். அவர்களுடன் பேசும் போது அன்பாக பேச வேண்டும்.
Feed Back:
நீங்கள் வேலைக்கு சென்ற இடத்தில் சில பேர் நல்ல விதமாகவும் கூறலாம், கெட்ட விதமாகவும் கூறலாம், அதனை ஏற்று கொள்ள கூடிய மனப்பக்குவம் இருக்க வேண்டும். உங்களிடம் ஏதும் தவறுகள் கூறினால் அதனை திருத்தி கொள்ள வேண்டும்.
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |