வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

30 வயதிற்குள் இதெல்லாம் செய்திடுங்க..

Updated On: April 6, 2024 5:56 PM
Follow Us:
things to do when your 30 years old in tamil
---Advertisement---
Advertisement

30 வயதிற்குள் செய்ய வேண்டியவை

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு ஆசை இருக்கும். அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக நாமும் பல முயற்சிகளை செய்வோம். இந்த முயற்சிகளில் பல வெற்றியில் முடியும். சில தோல்வியில் முடியும். சில தோல்வியில் முடிந்தாலும் அவை சிறந்த பாடத்தை சொல்லி கொடுத்திருக்கும்.

நாம் பள்ளியில் படிக்கும் போது நமக்கு படிப்பு மட்டும் தான் முக்கியமாக இருக்கும். கல்லூரி படிக்கும் போது இதனை நல்லபடியாக படித்து முடித்த பிறகு வேலைக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் 30 வயதிற்குள் செய்ய வேண்டியவை என்னவென்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

சொந்தக்காலில் நிற்க வேண்டும்:

நீங்கள் படித்து முடித்த பிறகு மற்றவர்களை நம்பி இல்லாமல் வேலைக்கு சென்று விட வேண்டும். நீங்கள் வேலைக்கு சென்றால் உங்களுக்கு என்று வருமானம் கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்குள் தன்னம்பிக்கை வரும்.

நண்பர்கள்:

30 வயதிற்குள் செய்ய வேண்டியவை

நாம் பள்ளி படிக்கும் போதே நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் இந்த நண்பர்கள் உங்களுக்கு ஒன்று என்றால் ஓடி வருபவராக இருக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்உண்மையாக இருக்கும் நண்பர்களை சம்பாதித்து விட வேண்டும்.

முதலீடு:

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் நல்ல முதலீடு ஒன்றில் சேமித்து வைப்பதன் மூலம் அவை எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய தொகையாக கிடைக்கும். அதனால் ஏதவாது ஒன்றில் முதலீடு செய்திடுங்கள்.

தீய பழக்கங்கள்:

30 வயதிற்குள் செய்ய வேண்டியவை

உங்களிடம் மது அருந்துதல், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை கைவிட வேண்டும். மேலும் நீங்கள் அதிகமாக கோபம் வரும் குணம் உடையவர்களாக இருந்தால் அந்த கோபத்தை விட வேண்டும்.

வெளிநாடு:

நீங்கள் 30 வயதிற்குள் ஒரு முறையாவது வெளிநாட்டிற்கு சென்று வந்திருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டிற்கு சென்றால் அங்கு உங்களுக்கு புது அனுபவம் கிடைத்திருக்கும். அதனால் ஒரு முறையாவது வெளிநாட்டிற்கு சென்று வாருங்கள்.

மற்றவர்களுக்காக வாழ கூடாது:

30 வயதிற்குள் செய்ய வேண்டியவை

நீங்கள் வாழும் வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள். மற்றவர்களுக்கு இந்த விஷயம் பிடிக்காது என்று அந்த செயலை செய்யாமல் இருக்காதீர்கள். வாழ்க்கை ஒரு முறை தான் அதனால் உங்களுக்கு பிடித்த மாதிரி வாழுங்கள்.

 

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now