எங்கள் பள்ளி மிளிறும் பள்ளி கட்டுரை

Advertisement

Engal Palli Milirum Palli Katturai in Tamil

ஒவ்வொருவரின் மனிதர்களின் வாழ்க்கையில் நம் பெற்றோர்களுக்கு அடுத்தது நமக்கு ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நம் பள்ளி கூடம் தான். பல அறிஞர்களையும், மருத்துவர்களையும், சாதனையாளர்களையும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது பள்ளியும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே பள்ளி வாழ்க்கையானது மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்திருக்கும். அதனால் அதனை நம்மால் மறக்க முடியாது.

நாம் படிக்கும் போது இருந்த பள்ளி ஆனது நம்முடைய குழந்தைகள் படிக்கும் போது, அப்படியே இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. ஏனென்றால் அந்த பள்ளியானது வளர்ச்சி அடைந்திருக்கும். அதனால் தான் இந்த பதிவில் எங்கள் பள்ளி மிளிரும் கட்டுரை பற்றி அறிந்து கொள்வோம்.

முன்னுரை:

ஒழுக்கத்தையும், கல்வியையும் சேர்த்து வழங்கும் பயிற்சி நிலையம் என்றால் அவை பள்ளி கூடம் தான். ஒரு மனிதனை சிற்பம் போல செதுக்குவதும் பள்ளி கூடம் தான். அறிவையும், அவனுடைய திறமையை வெளிக்காட்டுவதில் பள்ளி முக்கிய பங்காற்றுகிறது.

பள்ளியின் வடிமைப்பு:

நம்முடைய பெற்றோர்கள் படிக்கும் போது இருந்த பள்ளி கூடம் ஆனது அடுத்த 10 வருடத்திற்கு அப்படியே இருக்குமா என்றால் இல்லை. வருடந்தோறும் அவை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். பள்ளியின் வெளி வட்டாரமைப்பு ஆனது மகிழ்ச்சி தர கூடிய அளவு இருக்கும்.

பள்ளியின் அமைப்பு பாதுகாப்பு தருவதோடு, கண்களுக்கு அழகு சேர்க்கும் வகையில் இருக்கும். வெளி வட்டாரத்தில் பூங்காக்கள், செடிகள், மரங்கள் என கண்களுக்கு குளுமையாக நிறைய விஷயங்கள் இருக்கிறது.

கல்வியின் சிறப்பு கட்டுரை

அறிவு திறமை:

எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதில் எங்கள் ஆசிரியர்கள் திறமை ஆனவர்களாக இருக்கிறர்கள். எவ்வளவு கஷ்டமான பாடத்தையும் மாணவர்களுக்கு எளிமையான வகையில் புரியும் படி சொல்லி கொடுக்கும் வல்லமை படைத்தவர்கள். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் நூலக வசதி, கணினி வசதி போன்றவை காணப்படுகிறது. எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் ஆசிரியராகவும், விஞ்ஞானியாகவும், மருத்துவராகவும், பொறியியளாளராகவும் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள் தான்.

உடல் ஆரோக்கியம்:

எங்களுடைய பள்ளியில் சத்துணவுகள் வழங்கப்படும். அதாவது முட்டை, பயறு என பல்வேறுபட்ட சத்துணவுகள் வழங்கப்பட்டு எங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது எங்கள் பள்ளி கூடம்.

மேலும் ஆசிரியர்களானவர்கள் உடற்பயிற்சியினையும் கற்றுத் தருபவர்களாகவே காணப்படுகின்றனர். எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இதில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை புரிகின்றனர்.

முடிவுரை:

எங்கள் பள்ளியானது கல்வியை மட்டும் கற்று தராமல் அவர்களின் திறமையையும் வெளிக்காட்டுகிறது. மேலும் கல்வியை மட்டும் சொல்லி தராமல் மாணவர்களுக்கும் உதவும் வகையில் நிறைய விஷயங்களை கற்று தருகிறது. இதனால் எங்கள் பள்ளி ஆனது எப்போதும் பிரகாசமாக இருக்கிறது.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai

 

Advertisement