உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கட்டுரை

Advertisement

Ulluvathellam Uyarvullal Katturai

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Ulluvathellam Uyarvullal Katturai பற்றி விவரித்துள்ளோம். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். உயர்வு பற்றி மிக அருமையாக கூறப்பட்டது தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் பற்றி கட்டுரை வடிவில் நீங்கள் தேடினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாம், இப்பதிவில் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் பற்றி கட்டுரை வடிவில் கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கட்டுரை:

குறிப்பு சட்டகம்:
  • முன்னுரை
  • எண்ணம் போல் வாழ்வு
  • உயர்வுள்ளல் பற்றி சுவாமி விவேகானந்தர்
  • எண்ணங்களின் வலிமை
  • நேர்மறை எண்ணங்களின் பயன்கள்
  • உயர்வுள்ளலால் கிடைக்கும் வெற்றி
  • நம் இந்திய விண்வெளியின் உயர்வுள்ளல்
  • முடிவுரை

முன்னுரை:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் – 596)

நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை கைவிடக்கூடாது. எடுக்கும் முயற்சியை மட்டுமே எப்போதும் விட்டுவிட கூடாது. தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது. அதே உயர்ந்த எண்ணத்திலே இருப்பது எமது முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாகும்.

எங்கள் பள்ளி மிளிறும் பள்ளி கட்டுரை

எண்ணம் போல் வாழ்க்கை:

எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறி நாம் அனைவரும் அறிந்து இருப்போம். அதாவது, ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி சிறந்த எண்ணங்களே என்பதை உணர்த்துவே இந்த வரிகள். நாம் எதுவாக நினைக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். அதனால் நம் எண்ணங்கள் எப்போதும் உயர்ந்த எண்ணங்களாக இருக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் எப்போதும் நம்மை தவறானவற்றிற்கு இட்டுச்செல்லும். ஆகையால், நாம் எப்போதும் நல்ல உயர்ந்த எண்ணங்களை கொள்ள வேண்டும்.

உயர்வுள்ளல் பற்றி சுவாமி விவேகானந்தர்:

விவேகானந்தர் அவர்கள் உயர்வுள்ளல் மிக அருமையாக கூறியுள்ளார். “நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார் சுவாமி விவேகானந்தர். ஏதேனும் ஒரு இலட்சியத்தை வைத்து கொள்ளுங்கள். அதை பற்றி தீவிரமாக யோசியுங்கள். அந்த ஒரு எண்ணம் உங்கள் மனதில், உணர்வில், நாடி நரம்புகளில் எப்போதும் இருக்க வேண்டும். அப்போது அந்த இலட்சியம் நிறைவேறும. இந்த உலகமே அந்த இலட்சியம் நிறைவேற துணைபுரியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

எண்ணங்களின் வலிமை:

நம் எண்ணங்கள் உறுதியாகவும் வலிமையாகவும் இருந்தால் தான் வெற்றி நோக்கி நம்மால் போக முடியும். ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது நம் மனதில் தோன்றுகிறதோ அப்போதே அந்த விஷயத்தில் வெற்றி கிடைத்தது என்று அர்த்தம். ஒரு வெற்றி பாதையை நோக்கி நாம் போகும்போது வாழ்வில் முடியாது என்ற எண்ணமும் தோல்வி பயமும் இருக்க கூடாது. பல தோல்விகள் வந்தபோதிலும் முடியும் என்ற எண்ணமே எமது இலட்சியத்தை அடையும் வழியாகும்.

நேர்மறை எண்ணங்களின் பயன்கள்:

நாம் நேர்மறையான எண்ணங்களை எண்ணும் போது வெற்றி மிக விரைவில் கிடைக்கும். நம் உள்ளத்தில் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் இருந்தால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவும் உறுதியுடனும் இருப்போம். நம்மை வீழ்த்த எதுவுமில்லை. நேர்மறை எண்ணமானது எமக்கு ஏற்படும் போது பல பிரச்சினைக்கு தீர்வாக காணப்படும். எனவே, நம் உயர்வுக்கு நேர்மறை எண்ணங்கள் எப்போதும் அவசியம்.

நம் இந்திய விண்வெளியின் உயர்வுள்ளல்:

ஒரு செயலை நாம் நினைத்தால் அதனை எளிதில் முடிக்க முடியும். அதேபோல், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் உறுதியாக நமக்குள் இருக்க வேண்டும். நாம் வெற்றி வெறுவோமா என்று சிறிய சந்தேகத்துடன் கூடிய எண்ணம் இருந்தால் கூட அது வெற்றிக்கான தடையே ஆகும். ஆகையால், வெற்றி பெறுவதற்கு நாம் நினைப்பதெல்லாம் உறுதியான மற்றும் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள்

நம் இந்திய விண்வெளியின் உயர்வுள்ளல்:

2023 ஆம் ஆண்டு இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சந்திராயன் 2 நிலவின் தென்துருவத்தில் இறங்குவதாக இருந்தது. ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறால் அது நிலவை தொடுவதற்கு சற்று குறைவான தூரத்தில் தொடர்பை இழந்து காணாமல் போனது. எனவே, அப்போது அது தோல்வி அடைந்தது. இது தோல்வி அடைந்து விட்டது என்று எண்ணி சந்திராயன் 3 செயல்படுத்தப்படாமல் இருந்தால் நம்மால் சந்திராயன் 3 திட்டத்தினை வெற்றிகரமாக செய்து இருக்க முடியாது.

முடிவுரை:

நாம் வெற்றியை நோக்கி செல்ல வேண்டுமென்றால் அதற்கு நம் எண்ணங்கள் அனைத்தும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் உயர்ந்த எண்ணங்களை வைக்கின்றமோ அந்த அளவிற்கு நம் எடுத்தும் முயற்சியும் அவசியம். எந்த ஒரு மனிதன் சிறந்த எண்ணங்களை மனதில் வைத்து செயல்படுகிறானோ அவனது வாழ்க்கை சிறப்பானதாகவும் வெற்றி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement