தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை: பண்டைய காலங்களில் தேசிய ஒருமைப்பாடு மிகவும் குறைவாக இருந்த காலத்திலும் இந்திய நாட்டில் சுதந்திரத்திற்காக போராட்டம் தொடங்கிய காலம் முதல் தேசிய ஒருமைப்பாடு அனைத்து மக்களின் மனங்களிலும் வேரூன்ற ஆரம்பித்தது. தேச தலைவர்களின் எழுச்சியான போராட்டங்களின் விளைவாக தேசிய ஒருமைப்பாடு வளர தொடங்கியது. இந்தியாவை பல சமயங்கள், பல மொழிகள் என்று பல விஷயங்கள் வேறுபடுத்தி காட்டினாலும் இந்தியர்கள் என்ற உணர்வினால் இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர். இந்த பதிவில் தேசிய ஒருமைப்பாடு பற்றி கட்டுரை (Thesia Orumaipadu Katturaiin Tamil) வடிவில் படித்து தெரிந்துகொள்ளுவோம்.
மனித நேயம் கட்டுரை |
தேசிய ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் கட்டுரை:
பொருளடக்கம்:
1. முன்னுரை |
2. வேற்றுமையில் ஒற்றுமை |
3. இந்தியர்களின் ஒற்றுமை |
4. ஒருமைப்பாடு வளர்ப்போம் |
5. முடிவுரை |
முன்னுரை:
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பொன்மொழி. பல மதம், மொழி, இனம், பண்பாடு போன்றவற்றை நாம் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும்
ஒரே தாயின் பிள்ளைகள் என்று கூறுவதே தேசிய ஒருமைப்பாடாகும். வாழ்ந்த முன்னோர்கள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது.
வேற்றுமையில் ஒற்றுமை:
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை: 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசம், பல சாதி பிரிவின்மை, பல மொழிகள், மதம் போன்றவை தனித்தனியாக இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். தேசிய ஒருமைப்பாட்டை நாம் ஒவ்வொருவரும் வளர்த்து கொள்ள வேண்டுமானால் நாம் அடுத்தவர்களை நம்மளுடைய சகோதர சகோதர்கள் என்று நினைக்க வேண்டும்.
இந்தியர்களின் ஒற்றுமை:
இந்திய நாட்டில் பல மொழிகள், பல இனங்கள், பல சமயங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வினால் இந்தியர்கள் எப்போதும் அனைத்திலும் ஒற்றுமை அடைகிறார்கள். இந்திய தேசிய கீதமானது இசைக்கப்படுகின்ற நேரத்தில் ஒவ்வொரு இந்தியர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் போல் எண்ணி ஒற்றுமை மிக்க தேச பக்தர்களாகவும் தம்மை உணர்கின்றனர்.
தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை |
ஒருமைப்பாடு வளர்ப்போம்:
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை ஆறாம் வகுப்பு: இந்திய நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மற்றவர்களிடம் முரண்படுவதையோ, சண்டையிடுவதையோ தவிர்த்து எல்லோரும் ஒரே தேசத்தின் மக்கள் என்று மனதில் நினைக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேசப்பற்று மிகவும் முக்கியம். வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையினை வளர்த்து கொள்வதால் தான் இந்தியா பலமான நாடாக வளர்ச்சி அடைய முடியும்.
முடிவுரை:
ஒரு இந்தியர் பெற்ற சாதனையை உலகமெங்கிலும் இருக்கக்கூடிய இந்தியர்கள் பெருமையோடு கொண்டாடிய விதம் அவர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டியிருந்தது. உலக அளவில் நடக்கும் போட்டிகள், ஒலிம்பிக், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது இந்திய மக்களின் ஒற்றுமையை நாம் அங்கு பார்க்க முடியும். இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்போம்..!
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |