Kootu Pattavil Peyar Serpathu Eppadi in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் கூறப்போகின்றோம். பொதுவாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது சொத்து பிரச்சனை தான். என்ன தான் பாசமான அண்ணன் தம்பிகள் என்றாலும், சொத்து என்று வந்து விட்டால், அங்கு நீ யாரோ நான் யாரோ தான். அந்த அளவிற்கு சொத்து என்பது முக்கியமானதாக இருக்கிறது. சரி இன்றைய பதிவின் வாயிலாக நாம் கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..
கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி..?
பொதுவாக கூட்டு பட்டா என்றால் என்னவென்று தெரியாது. அதாவது கூட்டு பட்டா என்பது ஒரு குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் 4 பேருக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு இருக்கும் பட்டா கூட்டு பட்டா என்று சொல்லப்படுகிறது. அப்படி கூட்டு பட்டா இருக்கும் வீடுகளில் கண்டிப்பாக சொத்து பிரச்சனை என்பது வரும்.
அப்படி வரும் போது சிலர் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆகையால் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..
சரி கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
பொதுவாக அதிகமாக கூட்டுப்பட்டா இருப்பதற்கு காரணம் பூர்வீக சொத்துக்களை வாரிசுகள் எடுத்து கொள்வது அல்லது எழுதி கொடுப்பதனால் கூட்டு பட்டாக்களின் உரிமையாளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
பத்திரம் கிரையம் செய்யும் போதே எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் கூட்டு பட்டாவில் பெயர் இணைக்கலாம். அப்படி இணைத்த உடன் பட்டாவிலும் பெயர்கள் வந்து விடும். நாம் எந்த பட்டாவில் வேண்டுமானாலும் எளிதாக பெயர் மாற்ற முடியும். நீங்கள் முடிந்தால் சார் பதிவாளரிடம் சென்று உங்கள் பட்டாக்களின் பெயர்களை உடனடியாக மாற்றி விடலாம். இதுபோல நீங்கள் கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது என்பது மிகவும் சுலபமான விஷயமாகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |