கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?

How to get separate patta from joint patta in tamil

How To Get Separate Patta From Joint Patta

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி அனைத்து வீட்டிலும் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது சொத்து பிரச்சனை தான். என்னதான் உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சொத்து பிரச்சனையால் அவர்களிடம் வேற்றுமை ஏற்படுகிறது.

அதுபோல சில வீடுகளில் உடன் பிறந்தவர்கள் 4 பேர் இருப்பார்கள். அவர்கள் கூட்டு பட்டாவை தனிப்பட்டவாக மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் வாயிலாக கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..? 

 How to get separate patta from joint patta

ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும் சொத்து பிரச்சனை வந்து அவர்களை பிரித்து விடுகிறது. ஒரு குடும்பத்தில் 3 -க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவர்கள் சொத்து கூட்டு பட்டாவாக இருந்தால் சொத்து பிரச்சனை, நிலம் பிரச்சனை, நில எல்லை தகராறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் அதை தனி பட்டாவாக மாற்ற வேண்டும் என்று  நினைப்பார்கள்.

 ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு நிலத்திற்கு உரிமையாளர்களாக இருந்தால் அது கூட்டு பட்டா என்று சொல்வார்கள்.  

கூட்டு பட்டாவில் இருக்கும் ஒரு நபர் தனி பட்டா பெற வேண்டும் என்று நினைத்தால் அந்த நபரிடம் சொத்தின் நகல் மற்றும் பாகப்பிரிவினை பத்திரம் இருக்க வேண்டும். பாகப்பிரிவினை பத்திரம் எதற்கு வேண்டும் என்றால், உங்களுக்கு ஒரு நிலம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நிலம் எந்த திசையில் இருக்கிறது என்று அதில் தான் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் பாகப்பிரிவினை பத்திரம் இருக்க வேண்டும்.

புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

 

உங்கள் நிலங்களை அளந்து அதற்கென்று ஒரு வரைபடத்தை தயார் செய்து இ-சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று தனி பட்டா வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும்.

தனி பட்டாவாக மாற்ற தேவையான ஆவணங்கள்:

  • விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் மற்றும் அசல் நகல் இருக்க வேண்டும்.
  • நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், கடன் வழங்குநரிடமிருந்து NOC ஆவணத்தை வழங்க வேண்டும்.
  • தற்போதைய பட்டாவின் நகலில் விற்பனையாளரின் பெயர் இருக்க வேண்டும்.
  • ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்கள் இருக்க வேண்டும்.
  • மேல்கூறிய ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் வைத்து தாசில்தார் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு உங்கள் சொத்து கிராமப் பிரிவின் கீழ் வந்தால், உங்கள் விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரிக்கு (VAO) மாற்றப்படும். பின் உங்கள் விண்ணப்பம் ஓரிரு வாரங்களில் தனி பட்டாவாக மாற்றி கொடுக்கப்படும்.

நன்செய் நிலம் என்றால் என்ன..?

 

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ அனாதீனம் நிலம் என்றால் என்ன..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil