What Should Not be Eaten After Eating Jackfruit in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் வாங்க. வெயில் காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். இதனால், நாம் அனைவருமே இந்த சீசனில் பலாப்பழத்தை அதிகமாக வாங்கி சாப்பிடுவோம். பலாப்பழத்தை அதிகமாக சாப்பிட கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுமட்டுமின்றி, எந்தவொரு பொருளாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும்.
சரி விஷயத்துக்கு வருவோம். பலாப்பழம் சாப்பிட பிறகு நாம் ஒரு சில உணவு பொருட்களை சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால், அதனை பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்:
வெண்டைக்காய்:
பலாவை நீங்கள் சமைத்து சாப்பிடும் பொழுது வெண்டைக்காயுடன் மட்டும் சேர்த்து சமைத்து சாப்பிட கூடாது. இதனை சேர்த்து சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெண்டைக்காய் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சருமத்தில் வெண் திட்டுகள் தோன்றலாம்.
பால்:
பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு பால் குடிக்க கூடாது. அப்படி மீறி பாலை குடித்தீர்கள் என்றால் வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். முக்கியமாக உடலில் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
தேன்:
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிட கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் நம் உடலுக்கு பல தீமைகள் ஏற்படும். தேன் மற்றும் பலாப்பழம் இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை. இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், அது எதிர்விளைவை ஏற்படுத்தும்.
பப்பாளி:
பப்பாளி நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று தெரியும். ஆனால், பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளி சாப்பிட்டால் அழற்சி பிரச்சனை உண்டாகும். ஆகையால், பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
வெற்றிலை:
சிலருக்கு வெற்றிலை போடும் என்பது இருக்கும். அப்படி இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிட்டால் அதன் பிறகு வெற்றிலையை போடுவார்கள். இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |