தேர்தல் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

Advertisement

Importance of Election Essay in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தேர்தலின் முக்கியத்துவம் கட்டுரை பற்றி பார்க்கலாம் வாங்க. தேர்தலின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகையால், இப்பதிவில் தேர்தல் எவ்வளவு முக்கியம் என்பதை விவரித்துள்ளோம். எந்தவொரு விஷயத்தையும் கட்டுரை வடிவில் தெரியப்படுத்துவதன் மூலம், அதற்கான புரிதல் என்பது அதிகமாக இருக்கும். ஓகே வாருங்கள், தேர்தலின் முக்கியத்துவத்தை கட்டுரை வடிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தேர்தலின் முக்கியத்துவம் கட்டுரை:

குறிப்பு சட்டகம்
  • முன்னுரை
  • ஜனநாயகமும் தேர்தல்களும்
  • தேர்தல்களின் முக்கியத்துவம்
  • ஒரு விரல் புரட்சி
  • வாக்குரிமை
  • முடிவுரை

முன்னுரை:

உலகின் பல நாடுகளும்⸴ உலக மக்களும் ஜனநாயக ஆட்சியையே விரும்புகிறார்கள். மனித சமுதாயம் கடந்து வந்த அரசியல் அமைப்புகளில் ஆகச் சிறந்தது ஜனநாயகம் என்றால் அது மிகையல்ல. ஜனநாயக நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிப்பது தேர்தல் ஆகும். தேர்தல்கள் நடத்துவதன் மூலம் சட்டசபை⸴ நிர்வாக அமைப்புகள்⸴ பகுதி சார்ந்த மற்றும் உள்ளூர் அரசு போன்ற அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு தகுதியுள்ள நபர்கள் நிர்வகிக்கப்படுகிறார்கள். எனவே, தேர்தல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜனநாயகமும் தேர்தல்களும்:

இன்றைய உலக நாடுகளும் நாட்டு மக்களும் ஜனநாயகத்தினையே அதிகம் விரும்புகின்றனர். ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் அதில் தேர்தல்களுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு.

ஒரு ஜனநாயக சமூகம் என்பது அதன் தேர்தல் மூலமே வரையறுக்கப்படுகிறது. இதனால், உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமாக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

இந்திய குடிமகனாக உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தாம் விரும்பும் தலைவர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கும் அல்லது அவர்களுக்கு வாக்களிப்பதற்கும் ஒவ்வொரு இந்திய பிரதிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் விழிப்புணர்வு பாடல் வரிகள்

ஜனநாயகத்தில் தேர்தலின் முக்கியத்துவம்:

  • ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு பிறகு, ஆட்சியாளர்களும் அரசாங்கமும் மாற்றி அமைக்கப்படும். இதுவே, ஜனநாயக வழக்கமாகும். இதற்காகவே காலம் காலமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • ஜனநாயகத்தை தேர்தல்கள் மூலம் சர்வாதிகாரம்⸴ குடும்ப ஆட்சி⸴ ஊழல் நிறைந்த ஆட்சி போன்றவற்றைத் தடுத்து புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியும். ஆதலால் முறையற்ற ஆட்சியைத் தடுக்க தேர்தல்களில் முக்கியம் பெறுகின்றன.
  • தேர்தலில் பங்கேற்பதன் மூலம், ஒவ்வொரு குடிமகனும் அந்த விஷயத்தில் அரசியல்வாதி அல்லது அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • எந்தவொரு ஜனநாயகத்திலும் குடிமக்கள்தான் இறுதி அதிகாரம் என்பதால், தற்போதுள்ள அரசாங்கத்தின் சாசனங்களைப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் கருத்தைக் கூறலாம். அவர்கள் பின்வரும் வாக்குகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதற்கு முன் சிந்தித்து ஆட்சியை மாற்றலாம்.
  • நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், பெரும்பாலான அல்லது அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒரு பிரச்சினை தீர்க்கப்படவில்லை அல்லது அவற்றின் தீர்வில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஒருவர் உணர்ந்தால், அவர்கள் எப்போதும் அந்த விவாதத்தில் கலந்து கொள்ளலாம்.

ஒரு விரல் புரட்சி:

ஒரு புரட்சியின் பின்னரே நாட்டின் வளர்ச்சி என்பதே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியா சுதந்திரம் பெற மாபெரும் புரட்சி செய்யப்பட்டது.  அதேபோல் தான் இந்த ஒரு விறல் புரட்சி. தவறான அதிகாரிகள் ஆட்சிக்கு வருவதால், மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இந்த நிலை மாறி தகுதியானவர்கள் ஆட்சிப்பீடம் பெறும்போதும் பதவிகளை வகிக்கும் போதும் தான் மக்கள் நலமாக இருப்பார்கள். இந்த மாதிரியான மாற்றம் வர வேண்டுமென்றால், மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும். மக்களின் வாக்குரிமை என்ற ஒரு விரல் புரட்சியினால் மட்டுமே சிறந்த அரசாங்கத்தை உருவாக்க முடியும்.

வாக்குரிமை:

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வாக்களிக்க வேண்டும். யார் நாட்டை ஆளவேண்டும்? யார் ஆளும் அதிகாரத்திற்குப் பொருத்தமானவர்கள் என்பதை தீர்மானிக்க மக்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை வாக்குரிமை ஆகும். சுயாதீனமாகவும்⸴ சுதந்திரமாகவும் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். எதற்க்காகவும் வாக்குரிமையை விட்டு கொடுத்தல் கூடாது.

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

முடிவுரை:

நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஊழலற்ற நாட்டிற்கும், நாட்டு மக்களின் நலனில் அக்கறைக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும்⸴ பொருளாதாரத்தில் அக்கறையுள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வரவேண்டும். இதனை கருத்தில் கொண்டு தேர்தலின் முக்கியதுவத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் முறையாக வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement