World Malaria Day Katturai in Tamil | World Malaria Day 2024
World Malaria Day: இன்றைய பதிவின் வாயிலாக வாசகர்கள் அனைவருக்கும் உலக மலேரியா தின கட்டுரையை பற்றி தான் கூறப்போகின்றோம். பொதுவாக நம் இந்தியாவில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு தினமாக அறிவித்து வைத்துள்ளது. ஆகையால் நாமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு தினத்தை பற்றியும் அறிந்து கொண்டு வருகின்றோம். சரி உங்களுக்கு மலேரியா தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, எதனால் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.
உலக மலேரியா தினம் கட்டுரை
குறிப்பு சட்டகம் |
முன்னுரை
மலேரியா என்றால் என்ன மலேரியா தடுப்பூசி மலேரியா வழக்குகள் மலேரியா ஒழிப்பு முயற்சி இந்தியாவின் முயற்சிகள் முடிவுரை |
முன்னுரை:
உலக மலேரியா தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், 2012 ஆம் ஆண்டில் 627,000 பேர் மலேரியா நோயால் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.
ஆகவே மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று மலேரியா நாளாக அறிவித்தது.
மலேரியா என்றால் என்ன..?
மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோயாகும். அதாவது மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும்.
இந்த ஒட்டுண்ணியானது பாதிக்கப்பட்ட பெண் அனாபிலிஸ் கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. அதிலும் இந்த நோயானது குழந்தைகளை தான் அதிகமாக பாதிக்கிறது.
இந்த மலேரியா நோயானது ஆசியா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா உட்பட உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் மலேரியா மிகவும் பொதுவான நோயாக இருக்கிறது.
உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்
மலேரியா தடுப்பூசி:
இதுவரை, எந்த மலேரியா தடுப்பூசியும் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்த 75% செயல்திறனைக் காட்டவில்லை. இருப்பினும், மலேரியா கட்டுப்பாடு மற்றும் தடுப்பின் அவசரத்தைப் புரிந்து
கொண்டு, அதிகம் பரவும் நாடான ஆப்பிரிக்க நாடுகளில் வெளியிடப்படும் RTS,S எனப்படும் முதல் மலேரியா தடுப்பூசிக்கு WHO முன்னோக்கிச் சென்றது.
இந்த தடுப்பூசியானது 30-40% இடையே ஒப்பீட்டளவில் குறைந்த செயல்திறன் கொண்டது. மேலும், இந்த தடுப்பூசி GlaxoSmithKline (GSK), Bill and Melinda Gates Foundation போன்ற பல நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
அதன் பிறகு இந்தியாவில், பாரத் பயோடெக் (Bharat Biotech) நிறுவனத்திற்கு இந்த தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மலேரியா வழக்குகள்:
உலக மலேரியா அறிக்கை 2022 இன் படி , இந்த நோய் 2021 இல் 6,19,000 பேரின் உயிரைக் கொன்றது என்று கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மலேரியா பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை எடுத்துரைத்துள்ளது.
இது WHO ஆல் தொடங்கப்பட்டது மற்றும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கும் அகற்றுவதற்கும் WHO இன் உலகளாவிய முயற்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பாகும்.
மலேரியா ஒழிப்பு முயற்சி:
இந்த மலேரியா ஒழிப்பு முயற்சியானது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.
இந்த முன்முயற்சியானது உலகின் சில பகுதிகளில் மலேரியாவை அகற்றுவதில் கவனம் செலுத்து வருகிறது. இதில் பயனுள்ள சிகிச்சைகளுக்கான அணுகலை அதிகரிப்பது, கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் உள்ளிட்ட உத்திகளை செய்து வருகிறது.
இதன் பணியானது “மலேரியா 2016-2030 -க்கான உலகளாவிய தொழில்நுட்ப உத்தி” மூலம் வழிநடத்தப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 75% ஆகவும் மற்றும் 2015 ஆம் ஆண்டின் அடிப்படைக்கு எதிராக 2030 ஆம் ஆண்டளவில் குறைந்தது 90% ஆகவும் குறைப்பதை இந்த உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், 2021 ஆம் ஆண்டில், 2025 -க்குள் அடையாளம் காணப்பட்ட 25 நாடுகளில் மலேரியா பரவுவதைத் தடுக்க E-2025 முயற்சியை WHO தொடங்கியுள்ளது.
உலக சுகாதார தின பேச்சு போட்டி கட்டுரை
இந்தியாவின் முயற்சிகள்:
இந்த மலேரியா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்திய பல முயற்சிகளை செய்து வருகிறது. தேசிய வெக்டார் மூலம் பரவும் நோய் கட்டுப்பாடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குடைத் திட்டமாகும். இது வெக்டார் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்து தேசிய மலேரியா கட்டுப்பாட்டு திட்டம் (NMCP) இன்றை ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது 1953 இல் தொடங்கப்பட்டது.
அதன் பிறகு மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பு 2016-2030 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2030 ஆண்டுக்குள் நாடு முழுவதும் மலேரியாவை ஒழிக்கவும்,
மலேரியா பரவுதல் தடைபட்ட பகுதிகளில் மலேரியா இல்லாத நிலையைப் பேணுதல் மற்றும் மலேரியா மீண்டும் வருவதைத் தடுக்கவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
முடிவுரை:
2027 ஆம் ஆண்டிற்குள் மலேரியா இல்லாதது மற்றும் 2030 ஆம் ஆண்டிற்குள் நோயை ஒழிப்பது இந்தியாவின் நோக்கமாகும். ஆகவே இதற்கு மக்களின் ஆதரவும் முக்கியம் என்பதை நாம் அனைவருமே அறிய வேண்டும். இது நாட்டின் முயற்சி மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனின் முயற்சியும் ஆகும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |