உலக சுகாதார தினம் கட்டுரை | World Health Day Essay in Tamil..!

Advertisement

உலக சுகாதார தினம் கட்டுரை

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் உலக சுகாதார தினம் பற்றிய கட்டுரை பற்றி பார்க்கலாம் வாங்க. ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால், நாம் அனைவருமே தினமும் என்ன சிறப்பு நாள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல், அந்நாளை பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். அதாவது, அந்நாளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 07 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை பற்றி நாம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் உலக சுகாதார தினம் பற்றிய விவரங்களை கட்டுரை வடிவில் கொடுத்துள்ளோம்.

World Health Day Essay in Tamil:

குறிப்பு சட்டகம் 
  • முன்னுரை 
  • உலக சுகாதார தினம் என்றால் என்ன.?
  • உலக சுகாதார தினத்தின் செயல்பாடுகள்
  • உலக சுகாதார தினத்தின் முக்கியத்துவம்
  • முடிவுரை 

முன்னுரை:

‘ஆரோக்கியமே செல்வம்’ என்பது ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொதுவான பழமொழி. சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு செயல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்கள் நடத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 07 ஆம் தேதி உலக சுகாதார தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

உலக சுகாதார தினம் என்றால் என்ன.?

உலக சுகாதார தினம் ஆனது, உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு  ஆண்டும் ஏப்ரல் 07 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டத்தில் 1950 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 07 ஆம் தேதி உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு ஏப்ரல் 07 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்..!

உலக சுகாதார தினத்தின் முக்கியத்துவம்:

உலக சுகாதார தினம் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்காக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார தினத்தை கொண்டாடும் கருத்து உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 07 ஆம் தேதி உலக சுகாதார தினத்தை கொண்டாடுகிறோம். ஒவ்வொரு நாளும், மக்கள் பல நோய்களுக்கு இரையாகி, தங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க போராடுவதை நாம் அனைவருமே அறிவோம். எனவே, உலக சுகாதார தினத்தை கொண்டாடுவது நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றவும் ஆரோக்கியமான உணவை உண்ணவும் மக்களை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.

உலக சுகாதார தினத்தின் செயல்பாடுகள்:

  • உலக சுகாதார தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் உடல்நலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதற்காக WHO ஆல் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
  • உலக சுகாதார தினம், அனைத்து பங்கேற்பு நாடுகளின் அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • பல்வேறு நாடுகளில் உள்ள சுகாதார அதிகாரிகள் உலகெங்கிலும் உள்ள சுகாதார பிரச்சினைகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதிமொழியுடன் இத்தினத்தை கொண்டாடுகிறார்கள்.
  • உலகில் உள்ள முக்கிய சுகாதாரப் பிரச்சனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் செயல்படுகிறது.
  • சிக்கன் பாக்ஸ், போலியோ, பெரியம்மை, காசநோய், தொழுநோய் போன்ற பல்வேறு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை போகும் விதமாக WHO ஆனது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

முடிவுரை:

ஒவ்வொரு மனிதனுக்கும் சுகாதாரம் என்பது இன்றையமையாத ஒன்றாக இருக்கிறது. ஆகையால், நாம் அனைவரும் நம் உடல்நலத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதனால் உலக சுகாதார அமைப்பின் (WHO) அடித்தளம் அனைத்து மனிதர்களும் மிக உயர்ந்த அளவிலான ஆரோக்கியத்திற்கான உரிமையை உணர வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. எனவே, அனைவரும் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

உலக சுகாதார தின பேச்சு போட்டி கட்டுரை

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement