உலக சுகாதார தின பேச்சு போட்டி கட்டுரை

Advertisement

World Health Day Speech in Tamil

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. சுகாதாரம் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் நலமாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் போது இன்றைய காலத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவார்கள். இதற்கு முக்கியமாக காரணமாக இருப்பது நாம் தான். ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதில்லை, சுற்றுசூழல் மாசுபாடு போன்றவை காரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

உலக சுகாதார தின பேச்சு போட்டி:

இந்த சபையில் உட்கார்ந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன். நான் உலக சுகாதார தினத்தை பற்றி பேசப்போகிறேன்.

விளை நிலங்களை எல்லாம் அழித்து விட்டு வீட்டு மனைகளாக மாற்றுகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படுகிறது. இந்த பொருட்கள் எல்லாம் பூமியில் மக்காத குப்பையாக மாறி வருகின்றன.

தண்ணீரில் ரசாயனம், குடுநீரில் சாக்கடை நீர் கலக்கிறது,ஆற்று நீரில்சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலையின் கழிவுநீர் கலப்பது போன்றவை அதிகரித்து கொண்டே வருகின்றது. இது மாதிரி நீர்களை குடிப்பதால் ஆரோக்கியத்தில் காலரா, வயிற்றுப்போக்கு, தோல் நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய காலத்தில் பணம் வைத்துள்ளவன் பணக்காரன் அல்ல, எந்த நோயும் இல்லாமல் இருப்பவன் தான் பணக்காரன். ஒருவன் பணக்காரனாக இருந்து, அவன் நோய்வாய்ப்பட்டு இருக்கிறான் என்றான் அவன் பணக்காரனாக இருந்து எந்த பயனும் இல்லை.

வேலை, மன அழுத்தம், எண்ணங்கள் போன்றவை வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது. அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் வேலையை சிறப்பாக செய்ய முடியும்.

நல்ல ஆரோக்கியக்கியமாக இருப்பதற்கு ஆரோக்கியமான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். உலக சுகாதார தினம் ஆனது ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. அதனால் உங்களின் ஆரோக்கியத்தில் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்றால் இன்றைய நாளிலிருந்து உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai

 

Advertisement