உழைப்பே உயர்வு கட்டுரை | Uzhaipe Uyarvu Katturai in Tamil

Uzhaipe Uyarvu Katturai in Tamil

உழைப்பே உயர்வு தரும் கட்டுரை | Hard Work Essay in Tamil

கடின உழைப்பே நாம் வாழ்க்கையில் உயர்வதற்கு மிகவும் சிறந்த வழி. உழைப்பில்லாமல் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது கனவு காண்பது போல. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை உருவாக்குவதற்காக உழைப்பவர்களே வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைய முடியும். நாம் இன்றைய கட்டுரை தொகுப்பில் உழைப்பின் சிறப்புகளை கட்டுரை வடிவில் படித்தறியலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
உழைப்பின் சிறப்பு
சாதனையாளர்கள்
உழைப்பின் முக்கியத்துவம்
முடிவுரை

முன்னுரை:

நாம் கண் உறங்கிய பின்னும் இதயம் முதலான நமது உடல் உறுப்புகள் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. மரங்களின் வளர்ச்சிக்கு அதில் இருக்கும் வேர்கள் நீரை தேடுகின்றன. அதுபோல மனிதன் தன்னுடைய வாழ்வில் வெற்றிக்கனியை பறிப்பதற்கு கடின உழைப்பு அவசியம்.

உழைப்பின் சிறப்பு – உழைப்பே உயர்வு தமிழ் கட்டுரை:

  • விலங்குகளோடு விலங்காக திரிந்தனர் நமது முன்னோர்கள், ஆனால் நாம் இப்போது விண்ணையும், மண்ணையும் ஆண்டு கொண்டிருக்கிறோம், இதற்கு காரணம் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பே ஆகும்.
  • தேனீக்கள் தேனை சேகரிப்பதற்காக 16 மைல் தூரம் செல்கின்றன, எறும்புகள் ஓய்வில்லாமல் எப்போதும் உழைத்து கொண்டே இருக்கிறது, சிலந்தி தனது வலை எத்தனை முறை கலைக்கப்பட்டாலும் மீண்டும் அந்த வலையை பின்னி வாழ்கிறது. அதுபோல நாமும் எந்த ஒரு வேலையையும் கடின முயற்சியுடன் செய்து முடிக்க வேண்டும்.
  • உழைப்பின் சிறப்பை போற்றும் விதமாக மே மாதம் 1-ம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

சாதனையாளர்கள் – Uzhaipe Uyarvu Katturai in Tamil:

  • நமது தேச தலைவர்களான காந்தி மற்றும் நேருவின் கடின முயற்சியும், உழைப்பும் தான் இன்று நாம் சுதந்திரமாக சுற்றி திரிவதற்கு காரணமாக இருக்கின்றன.இன்று நாம் கடின முயற்சியுடன் வேலை செய்தால் தான் நாளை நாமும், நமது சந்ததியினரும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
  • அறிவியலின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன் பல தோல்விகளுக்கு பிறகு தன்னுடைய கடின முயற்சியின் மூலம் ஒளிரும் விளக்கை கண்டுப்பிடித்தார். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆபிரகாம் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து, கடினமாக உழைத்து அமெரிக்காவின் அதிபரானார். தன்னுடைய வாழ்க்கை நிலையை மாற்றுவது நமது கையில் தான் உள்ளது. இவர்களின் சாதனையை நாம் இன்று போற்றுவதற்கு முக்கிய காரணம் அவர்களின் உழைப்பு தான்.

உழைப்பின் முக்கியத்துவம் – Hard Work Essay in Tamil:

எப்போதும் வேலை செய்ய தயாராக இருக்கும் மனநிலையில் உள்ள ஒரு மனிதனை வெற்றி தேடி வருகிறது. எந்த ஒரு பணியையும் மிகவும் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால் நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க முடியும். எத்தனை முறை தோல்வியை கண்டாலும் அதை பற்றிய கவலை மனதில் சிறிதும் இல்லாமல் உழைக்க வேண்டும்.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

என்ற குறளுக்கு ஏற்ப அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

முடிவுரை – உழைப்பே உயர்வு பற்றி கட்டுரை:

வாழ்க்கை பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடைய நமக்கு வேண்டிய மூலதனம் உழைப்பு. ஆயிரம் பேரை விட நீங்கள் சிறந்த நபராக இருக்க வேண்டுமெனில், ஆயிரம் மடங்கு உழைப்பை நீங்கள் போட வேண்டும். எந்த வேலையையும் நாம் 100 மடங்கு அர்ப்பணிப்புடன் செய்தால் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைய முடியும்.

சோம்பேறியாக இருந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும்,
எழுந்து நடந்தால் இமயமும் உனக்கு குடைப்பிடிக்கும்.

உழைப்போம்! உயர்வோம்! 

தன்னம்பிக்கை கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai