தன்னம்பிக்கை கட்டுரை | Thannambikkai Katturai in Tamil

Thannambikkai Katturai in Tamil

தன்னம்பிக்கை பற்றிய கட்டுரை | Thannambikkai Essay in Tamil 

Thannambikkai Katturai in Tamil: வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது அவர்களுடைய தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை என்பது முதலில் உங்கள் மீது வைக்கும் தன்னம்பிக்கை, உங்களுடைய செயல்களின் மீது வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். எந்த ஒரு செயலிலும் தன்னம்பிக்கை உள்ள மனிதன் எளிமையாக வெற்றி பெறுவான். தன்னம்பிக்கை அற்று பேசுபவன் தோற்றுபோய்க்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையிலையோ அல்லது எந்த ஒரு காரியத்தையோ தொடங்குவதற்கு முன்பு இது சரியாக வராது என்று எண்ணினால் எப்போதுமே நம்மால் வெற்றி இலக்கினை அடைய முடியாது. நாம் சாதிக்க முடியும் என்று மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நிச்சயமாக நாம் எடுத்த காரியத்தில் சுலபமாக வெற்றியை அடைந்து விடலாம்.

பொருளடக்கம்:

1. முன்னுரை 
2. வாழ்க்கையில் தன்னம்பிக்கை மூலம் கிடைக்கும் நற்பலன்கள் 
3. எப்போதும் தன்னம்பிக்கை இல்லாதவருக்கு உண்டாகக்கூடிய தீய செயல்கள் 
4. உங்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சில வழிமுறைகள் 
5. முடிவுரை 

முன்னுரை:

வாழ்க்கையில் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நெடுநாள் வாழலாம். ஏதேனும் புதிதாக முடிவுகள் எடுக்க நினைப்பவர்கள் மனதில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் எப்போதும் மனதில் குழப்பத்துடனும், அடுத்தவர்களை நம்பி இருப்பார்கள். இந்த நிலையினை தவிர்த்து வாழ்க்கையில் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கையில் முன்னேற ஒரு நல்ல வழிகாட்டி. 

வாழ்க்கையில் தன்னம்பிக்கை மூலம் கிடைக்கும் நற்பலன்கள்:

மனிதர்கள் என்றாலே லட்சியம் இல்லாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். வாழ்க்கையில் உள்ள குறிக்கோளை அடைய நம்மிடம் முக்கியமாக இருக்க வேண்டியது தன்னம்பிக்கை. வாழ்க்கையில் ஒருவருக்கு தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் எந்த ஒரு செயலிலும் வெற்றியை நோக்கி பயணம் அடையலாம்.

தன்னம்பிக்கை பொன்மொழிகள்..!

 

மேலும் நம்மிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்பட்டால் சுய கட்டுப்பாடு நிறைந்த ஒழுக்கம் தானாகவே வந்து அமைகிறது. நாம் செய்யும் செயல்கள் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் தானாகவே புதிய முயற்சிகளை எடுக்க தன்னம்பிக்கை என்ற ஊன்றுகோல் உதவிகரமாக இருக்கிறது.

எப்போதும் தன்னம்பிக்கை இல்லாதவருக்கு உண்டாகக்கூடிய தீய செயல்கள்:

  • மனதில் எப்போதும் தன்னம்பிக்கை அற்று காணப்படுபவர்கள் எப்போதும் மனசோர்வுடன் காணப்படுவார்கள். 
  • ஏதேனும் அதிகமாக சிந்தனை செய்யும் (Over Thinking) மனம் பற்றிய பாதிப்பு ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது.
  • தங்களிடம் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் எந்த ஒரு செயலுக்கும் செய்ய அச்சம்பட்டு கொண்டே இருப்பார்கள். 
  • மனதில் தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்கள் தானாக எந்த ஒரு காரியத்தினையும் செய்யாமல் மற்றவர்களுடைய துணையை நம்பியே இருப்பார்கள்.
இளம்வயதிலேயே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

உங்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சில வழிமுறைகள்:

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிர்க்கவும்: வாழ்க்கையில் எப்போதும் அடுத்தவர்கள் இப்படி இருக்கிறார்கள், இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று ஒப்பிடுவதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் வாழ்க்கையை பற்றி நாம் நினைப்பதால் நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒருபோதும் வளர்ச்சி நிலையை அடைய முடியாது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

உடலை சரியான நிலையில் பராமரிக்க வேண்டும்: மனமானது எப்போதும் ஒருநிலையாக இருக்க உடலை நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு நமது உடலானது அதுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒரு செயலை செய்ய செயலுக்கு தகுந்தாற்போல் உடல் ஒத்துழைப்பு இருந்தால் அந்த செயலில் கண்டிப்பாக பலமடங்கு வெற்றியை காண்பிக்க முடியும்.

முடிவுரை:

குறிப்பாக உடல் ஒத்துழைப்புக்கு சரியான யோகா பயிற்சி, அதிக அளவிற்கு உணவினை தவிர்த்துக்கொள்ளுதல், சரியான நேரத்திற்கு தூக்கம், அதிகாலை தூங்கி எழுந்ததும் தவறாமல் உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை தொடர்ச்சியாக உங்கள் வாழ்க்கை முறையில் நடைமுறைக்கு கொண்டு வந்தால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடனும், களைப்பு இல்லாமல் புத்துணர்ச்சியுடனும், மனதில் எப்போதும் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். அதனால் மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் நமக்கு நாமே மன தைரியம் கூறி வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் கடந்து செல்வோம். எப்போதும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி உங்களுக்கே..!

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil