Nagangal Vaithu Noigalai Therindhu Kollalam
நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வைத்து தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது நம் நகங்களின் தோற்றம் சீராக இருக்கின்றன. எப்படி ஒருவரின் முகத்தை வைத்து அவரின் மனநிலையை அறிவது போல் ஒருவரின் கை கால் நகங்களை வைத்து அவர் ஆரோக்கியத்தை கணித்து விடமுடியும். அது எப்படி என இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
ஆரோக்கியமற்ற கை நகம் :
நகங்களின் நிறம் மங்கலாக தெரிவது, நகங்களில் வெள்ளை வெள்ளையாக ஆங்காங்கே இருப்பது, இந்த அறிகுறிகள் எல்லாம் உங்கள் நகங்களில் தெரிந்தால் அது ஆரோக்கியமற்ற அறிகுறியை வெளிப்படுத்துகிறது என அர்த்தம். நகங்கள் பொரிந்து பொரிந்து கொட்டுவது இது எல்லாம் ஆரோக்கியம் இல்லாத தன்மையை குறிக்கிறது.
தைராய்டு :
தைராய்டு இருப்பவர்களுக்கு கால் நகங்கள் அடிக்கடி உடையும். கால் நகங்கள் விரிசலுடன் காணப்படும். இது எல்லாம் தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நகங்கள் காட்டும் அறிகுறியாகும்.
கால்சியம் குறைபாடு :
உடலிற்கு சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் கை விரல் மற்றும் கால் விரல் நகங்களில் வெள்ளையாக ஆங்காங்கே திட்டு திட்டாக காணப்படும் இதை வைத்து நீங்கள் உங்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதை உங்களால் உணர முடியும். ஆரம்பத்தில் தெரியும் போதே இதனை நீங்கள் கவனித்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தேற்றலாம்.
பூஞ்சை தொற்று :
உங்கள் நகங்கள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் நகங்கள் ஆங்காங்கே தோள்கள் பிய்ந்து காணப்படும். சொத்தை நகங்கள் உருவாகும். இதற்கு நீங்கள் உங்கள் நகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.
ஆரோக்கியமான நகங்களின் தோற்றம் :
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நகங்கள் மென்மையாகவும் லைட் பின்காக காணப்படும். நகங்கள் மங்கலாக இருந்தால் பயப்படாமல் அதன் நிலையை அறிந்து அதற்கேற்றாற் போல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக இருக்க சின்ன டிப்ஸ்.!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |