வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய 10 வரிகள்..!

Updated On: April 3, 2026 5:02 PM
Follow Us:
Ambedkar Speech in Tamil 10 Lines
---Advertisement---
Advertisement

Ambedkar Speech in Tamil 10 Lines

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இப்பதிவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றிய 10 வரிகள் பற்றி பார்க்கலாம். Ambedkar பற்றி தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. சாதி வேறுபாட்டினை ஒழிக்க பெரிதும் பாடுபட்டவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இதனை தவிர பி.ஆர்.அம்பேத்கர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அதாவது, பி.ஆர்.அம்பேத்கர் வரலாறு, சாதனைகள், எழுதிய புத்தகங்கள் மற்றும் சமூக பணிகள் என பி.ஆர்.அம்பேத்கர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது.

அவற்றில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பி.ஆர்.அம்பேத்கர் பற்றி 10 வரிகளில் தெரிந்துகொள்ளும் வகையில் பி.ஆர்.அம்பேத்கர் பற்றிய விவரங்களை சுருக்கமாக கொடுத்துள்ளோம். வாருங்கள், பி.ஆர்.அம்பேத்கர் பற்றி தெரிந்து கொள்வோம்.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சாதனைகள்..!

10 Points About Dr B.R Ambedkar in Tamil:

10 Points About Dr B.R Ambedkar in Tamil

  • பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) அவர்கள், அவரது ஆதரவாளர்களால் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அன்போடு அழைக்கப்படுவார்.
  • பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள், 1891 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய மாகாணத்தில் (மத்திய பிரதேசத்தில்) உள்ள மோவில் பிறந்தார்.
  • டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாள் ‘அம்பேத்கர் ஜெயந்தி’ என்று கொண்டாடப்படுகிறது
  • தீண்டத் தகாதவர்களின் சமத்துவத்திற்காகப் போராடினார். சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக போராடியவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • 1912 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.
  • அதன் பிறகு, 1927 ஆம் ஆண்டில் லண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • 1918 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சிடன்ஹாம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகச் சேர்ந்தார்.
  • பூனா ஒப்பந்தத்தின் போது அவர் முக்கிய பங்கு வகித்தார்.
  • அம்பேத்கரின் முயற்சியால் இந்தியாவில் வேலை நேரம் 14 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
  • அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார்.
  • 1920 ஆம் ஆண்டில் ‘மூக்நாயக’ என்ற பத்திரிகையை துவக்கினார்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1990 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • பீம்ராவ் அம்பேத்கரின் முதல் சிலை 1950 ஆம் ஆண்டு கோலாப்பூர் நகரில் நிறுவப்பட்டது.
  • அம்பேத்கர் “அரசியலமைப்பின் தந்தை” என்றும் அழைக்கப்பட்டார்.
  • பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் 1956 ஆம் ஆண்டில் டிசம்பர் 06 ஆம் தேதியன்று  டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now