7 Members of Appam Ingredients List
பொதுவாக ஒவ்வொரு நாளும் வரும் இனிமையான காலை பொழுதானது எப்போதும் பரப்பரப்பு மிகுந்த ஒரு நாளாகவே அணைவருக்கும் இருக்கும். ஏனென்றால் காலை நேரத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்தல், வீட்டில் உள்ளவர்களை வேலைக்கு கிளப்பி விடுதல் என இதுபோன்ற பல வேலைகள் இருக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைக்கும் சேர்த்து உணவுகளையும் செய்து கொடுக்க வேண்டிய சுழலும் ஏற்படும். அதனால் எப்போதும் காலையில் இட்லி, தோசை என இந்த இரண்டு விதமான ரெசிபியை மட்டும் தான் செய்வார்கள். சரி இரவு நேரத்தில் வேறு ஏதாவது வித்தியாசமான பொருளை அமைத்து கொடுக்கலாம் என்றாலும் கூட அதனை எப்படி செய்வது என்ற குழப்பம் இருந்தாலும் கூட அதற்கு முதலில் என்னென்ன பொருட்கள் என்ன அளவில் வேண்டும் என்பதும் பலருக்கு தெரியாமலே இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் 7 நபருக்கு ஆப்பம் செய்ய தேவையான பொருட்களின் அளவு என்ன என்பதை தான் விரிவாக பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
7 பேருக்கு அப்பம் செய்ய தேவையான பொருட்களின் அளவு பட்டியல்:
பொருட்களின் பெயர் | அளவு முறை |
அரிசி | 700 கிராம் |
துருவிய தேங்காய் | 1 3/4 கப் |
சர்க்கரை | 3/4 தேக்கரண்டி |
உலர் ஈஸ்ட் தேவைப்பட்டால் | 3/4 தேக்கரண்டி |
தண்ணீர் | 2 1/2 கப் |
உப்பு | தேவையான அளவு |
7 பேருக்கு ஆப்பம் மாவு அரைக்கும் முறை:
முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள அரிசியை குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு ஊறவைத்துள்ள அரிசியை நன்றாக மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அரைத்து வைத்துள்ள அரிசி மாவினை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு துருவிய தேங்கையை அதில் சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு இதனையும் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
கடைசியாக பாத்திரத்தில் உள்ள அரிசி மாவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேட்ஸையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஆப்பம் செய்ய ஆப்பம் மாவு தயார்.
எனவே ஆப்பம் எப்படி செய்வது என்று நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை மட்டும் கிளிக் செய்தால் போதும் அதனையும் கற்றுக்கொள்ளலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |