காலை உணவுக்கு இந்த ஆப்பத்தை செய்து பாருங்கள்..! சூப்பரா இருக்கும்..

Advertisement

Appam Recipe in Tamil

பெரும்பாலும் பல வீடுகளில் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா  மற்றும் பூரி போன்ற உணவுகளே காலை அல்லது இரவு உணவாக இருக்கும். இதனையே தினமும் சாப்பிடுவதால் ஒரு சில நேரங்களில் வேறு ஏதேனும் உணவு இல்லையா.. இதையே செய்து கொடுக்கிறீர்கள் என்று அம்மாவிடம் கேட்பார்கள். அப்படி கேட்கும் வேறு விதமான ஆரோக்கியமான காலை உணவை நீங்கள் சமைக்க விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான மற்றும் சுவையான அப்பம் செய்முறையை படித்து தெரிந்து சமைத்து மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Appam in Tamil:

 ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்

ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – 200 கிராம் 
  • தேங்காய் துருவல் – 1/2 கப் 
  • வடித்த சாதம் – 1/4 கப் 
  • உப்பு – தேவையான அளவு 
  • தண்ணீர் – தேவையான அளவு 

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் 200 கிராம் பச்சரியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் வரை ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு, பச்சரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

 appam recipe in tamil

அடுத்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள பச்சரி மாவில் 1 கரண்டி மாவினை சேர்த்து கொள்ளுங்கள்.

மாலை நேர டீக்கு ஏற்ற சூப்பரான மொறுமொறு உருளைக்கிழங்கு வடை செஞ்சு பாருங்க..!

அதன் பிறகு, இதில் 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டு இறக்கி கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு பெரிய மிக்ஸி ஜாரினை எடுத்து கொள்ளுங்கள். அதில் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் துருவிய தேங்காய், 1/4 கப் சாதம் சேர்த்து மற்றும் தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்து  கொள்ளுங்கள்.

இதனை, 8 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை புளிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்பு, மறுநாள் காலையில் மாவினை எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

 ஆப்பம் சுடுவது எப்படி

இறுதியாக அடுப்பில் ஒரு குழியான பாத்திரத்தை வைத்து ஆப்பம் மாவினை சேர்த்து நன்கு சுழற்றி விட்டு மூடி வைத்து விடுங்கள்.

2 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான ஆப்பம் ரெடி..! இதனுடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

மொறு மொறு பிரட் போண்டா..! மாலைநேர தேநீருடன் சுவைக்க அருமையான ஸ்நாக்ஸ்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement