Aam Panna Juice in Tamil
பொதுவாக மழைக்காலம் என்றால் சூடா என்ன சாப்பிடலாம் என்று நினைப்பார்கள். ஏனென்றால் குளிருக்கு ஏற்றதாக இருக்கும். அது போல இந்த வெயில் காலம் வந்தால் எப்படி வெயிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள். எப்போதும் இருக்கும் உடல் சூட்டை விட சற்று அதிகமாக இருக்கும். இந்த உடல் சூட்டை குறைப்பது எப்படி என்று தேடி கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் இந்த வெயிலுக்கு ஏற்ற ஜூஸ் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
Ingredients
- மாங்காய்-2
- புதினா இலை-சிறிதளவு
- சர்க்கரை- 3 ஸ்பூன்
- மிளகு பொடி- 1 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி-1/2 தேக்கரண்டி
- ஐஸ் கட்டி-தேவையான அளவு
Instructions
ஆம் பன்னா ஜூஸ் செய்முறை
இந்த பதிவில் ஆம் பன்னா ஜூஸ் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த ஜூஸ் ஆனது இந்தியர்கள் கோடைக்காலத்தில் அருந்த கூடிய பானமாக ஆம் பண்ணா ஜூஸ் இருக்கிறது. இதில் பன்னா என்பது மாங்காய் ஜூஸ் என்று பொருள். இவை செரிமான பிரச்சனையை சரி செய்ய கூடிய ஒன்றாக இருக்கிறது.
முதலில் மாங்காயை வேக வைக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மாங்காயை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் குக்கரில் வேக வைக்கிறீர்கள் என்றால் 3 விசில் வரும் வரை விட வேண்டும்.
மாங்காய் வெந்த பிறகு உள்ளே இருக்கும் சதை பகுதியை மட்டும் எடுத்து மிக்சியில் சேர்க்க வேண்டும். இதனுடன் புதினா இலை, சர்க்கரை 3 ஸ்பூன், வறுத்து பொடி செய்த சீரகம் 1 ஸ்பூன், மிளகுத்தூள் 1 ஸ்பூன், ஏலக்காய் தூள் ½ ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் 4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இதில் மேலே 4 புதினா இலைகளை தூவி மற்றவர்களுக்கு கொடுங்க..
கோடை காலத்தில் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஜூஸ்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |