Current Kandupidithavar | மின்சாரத்தை கண்டுபிடித்தவர்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார் என்ற விவரங்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார் என்ற கேள்வி நம் அனைவரது மனதிலும் ஓடி கொண்டிருக்கும். இக்காலத்தில் மிசாரம் இல்லாமல் இருக்க முடியாது. இப்படி நமக்கு இன்றையமையாததாக இருக்ககூடிய மின்சாரத்தை யார் கண்டு பிடித்து இருப்பார்கள்.
முன்பெல்லாம் வாழ்ந்த மனிதர்கள் மின்சார வசதி இல்லாமல் மண்ணெண்ணை விளக்குகளும், தெரு விளக்குகளிலும் வாழ்க்கையை கடந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட நம்மால் பார்க்க முடியவில்லை. குறிப்பாக வெயில் காலத்தில் சொல்லப்போனால் மின்சாரம் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. பெரும்பாலான இயந்திரங்கள் அனைத்துமே மின்சாரத்தால் தான் இயங்கி வருகிறது. நமது வாழ்க்கை தேவைக்கு மிகவும் முக்கியத்துவமாக இருப்பது மின்சாரம். அப்படிப்பட்ட மின்சாரத்தை கண்டுபிடித்தது யாரென்பதை நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? வாங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாம்.
மின்சாரம் தாக்கியவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்..?
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்? | Who Invented Electricity in Tamil:
மின்சாரத்தை கண்டுபிடித்தது யார் தெரியுமா?
விடை: பெஞ்சமின் பிராங்க்ளின்
- தற்போது மின்சாரத்தை பெஞ்சமின் பிராங்க்ளின் கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர் மட்டுமே கண்டுபிடிக்கவில்லை. மின்சாரம் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தவர் என்ற பெருமை பெஞ்சமின் பிராங்க்ளினை சேரும். மின்சாரத்தை கண்டுபிடிக்க பலரும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
- மிலேட்டஸின் தேல்ஸ் – இவர், அம்பரைத் தேய்த்து நிலையான மின்சாரத்தை முதன்முதலில் ஆய்வு செய்தவர்.
- வில்லியம் கில்பர்ட் – “மின்சாரம்” என்ற வார்த்தையை உருவாக்கி காந்தவியல் பற்றி ஆய்வு செய்தார்.
- பெஞ்சமின் பிராங்க்ளின் – மின்னல் மின்சாரம் என்பதை நிரூபித்த புகழ்பெற்ற காத்தாடி பரிசோதனையை நடத்தினார்.
- லூய்கி கால்வானி – தவளைக் கால்களில் “விலங்கு மின்சாரம்” இருப்பதைக் கண்டுபிடித்தார்.
- அலெஸாண்ட்ரோ வோல்டா – முதல் உண்மையான பேட்டரியான வோல்டாயிக் பைலைக் கண்டுபிடித்தார் .
- மைக்கேல் ஃபாரடே – மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தார், இது மின்சார ஜெனரேட்டர்களை உருவாக்க உதவியாக இருந்தது. இதுவே மின்சாரம் உற்பத்திக்கு அடித்தளமாக அமைத்தது.
- தாமஸ் எடிசன் மற்றும் நிகோலா டெஸ்லா – எடிசன் நேரடி மின்னோட்டத்தை (DC) ஊக்குவிப்பதன் மூலமும், டெஸ்லா மாற்று மின்னோட்டத்தை (AC) ஊக்குவிப்பதன் மூலமும் நடைமுறை மின்சார அமைப்புகளை உருவாக்கினர்.
மின்சாரம் என்றால் என்ன:
மின்சாரம் என்பது மின்சாரத்தை வரையறுக்க உதவும் அடிப்படை அளவுருக்கள். அடிப்படை அளவுருக்களானது மின்னழுத்தம், மின் மின்னோட்டம் அல்லது தீவிரம், மின் சக்தி மற்றும் உற்பத்தி செய்யப்படும் அல்லது நுகரப்படும் மின் ஆற்றல். எலெக்ட்ரிக் என்ற சொல் கிரேக்க மொழியான எலெக்ட்ரான் (Electron) என்பதில் இருந்து தோன்றியது.
மின்சாரமானது ஆறாம் நூற்றாண்டிலையே கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கம்பியில் நடக்கும் மின்னணுக்களின் ஓட்டத்தால் தான் மின்சாரம் உருவாகிறது. மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை இப்போது மாறிவிட்டது. மின்சாரம் கிடைக்கிறது என்று நாமும் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தினால் வருங்கால சந்ததியினருக்கு மின்சார தட்டுப்பாடு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மின்சாரத்தினை நாம் ஒவ்வொருவரும் முடிந்த அளவிற்கு சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |