வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பென்சிலின் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா..?

Updated On: April 19, 2024 7:28 PM
Follow Us:
Penicillin Kandupidithavar Yaar in Tamil
---Advertisement---
Advertisement

Penicillin Kandupidithavar Yaar in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இவ்வுலகில் நாம் தெரிந்து கொள்வதற்கு நெறைய தகவல்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் தகவல்களை பற்றி நாமும் நம் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக பென்சிலின் என்றால் என்ன..? அதை கண்டுபிடித்தவர் யார் மற்றும் பென்சிலின் பற்றிய பல தகவல்களை இந்த பதிவின் கொடுத்துள்ளோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

பென்சிலின் என்றால் என்ன..?

பெனிசிலின் என்பது பாக்டீரியாத் தொற்றைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு தொகுதி பீட்டா-லாக்டம் நுண்ணுயிர்க் கொல்லிகளைக் குறிக்கும்.

அதாவது, பென்சிலின் என்பது ஆரம்பகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் முகவர்களில் ஒன்றாகும். கூடுதலாக, பென்சிலின் பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பீட்டா-லாக்டாம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் குழுவாகும்.

அதுமட்டுமில்லாமல், பென்சிலின் வளர்ச்சியானது தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அணுகுமுறைகளின் முழு திசையையும் மாற்றியது மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியது.

செல்போன் கண்டுபிடித்தவர் யார்..

பென்சிலின் கண்டுபிடித்தவர் யார்..? 

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்த பின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணமான விஷயமாக இருந்தது.

லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மக்களை மரணத்திற்கு அழைத்து சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது.

அப்படி மனிதர்களின் உயிரை காப்பாற்றும் பென்சிலினை 1928 ஆம் ஆண்டு கண்டுபிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானி தான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். இவர் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர்.

ஆனால் நோபல் பரிசு பெற்றவரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான ஹோவார்ட் வால்ட்டர் புளோரே (Howard Walter Florey) என்பவர் தான் இந்த மருந்தை முதன் முதலில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தினார்.

ரயிலை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now