Who Invented the Dialysis Machine in Tamil
நாம் இக்காலத்தில் பயன்படுத்தி வரும் பல்வேறு விதமான செயற்கை கருவிகள் அனைத்தையும் முந்தைய காலத்தில் ஒரு அறிவியலாளர்கள் கண்டபிடித்துள்ளார்கள். அவர்களின் அணைத்து கண்டுபிடிப்புக்களும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு மிகவும் வியப்பாகவும் இருக்கிறது. அப்படி நம்மை வியப்பில் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் டயாலிசிஸ் இயந்திரம். இது மருத்துவ துறையில் பயன்படும் ஒரு கருவியாகும்.
மருத்துவத்தில் பல்வேறு விதமான சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றால் அது சிறுநீரக செயலிழப்பிற்கு கண்டுபிடிக்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரம் என்றே சொல்லலாம். இப்போது டயாலிசிஸ் சிகிச்சை பெரும்பாலனவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அதனால், இவ்வளவு அதிகமாக பயன்படும் டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் வாருங்கள் இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்:
டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் வில்லெம் கோல்ஃப் (Willem Kolff) ஆவார். 1945 இல் வில்லெம் கோல்ஃப் என்பவர் ஒரு நோயாளின் சிறுநீரக சிகிச்சைக்காக சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தார். இந்த டயாலிசிஸ் இயந்திர சிகிச்சையை செயலிழந்த 67 வயதுள்ள ஒரு நபருக்கு வைத்து ஆய்வு செய்தார். இந்த டயாலிசிஸ் சிகிச்சையில் அவர் வெற்றியும் பெற்றார்.
சிறுநீரக டயாலிசிஸ் என்பது சிறுநீரகம் சரியாக வேலை செய்வதை நிறுத்தும் போது பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும். டயாலிசிஸ் ஆனது, அதிகப்படியான திரவம் மற்றும் இரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நோயாளிகள் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை உருவாக்கும் போது சிறுநீரக டயாலிசிஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
இக்காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரக செயலிழப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகையால், சிறுநீரக செயலிழப்பு ஆளானவர்கள் அனைவருக்கும் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
செல்போன் கண்டுபிடித்தவர் யார்?
Willem Kolff பற்றிய சில தகவல்கள்:
வில்லெம் ஜோஹன் “பிம்” கோல்ஃப் அவர்கள் பிப்ரவரி 14, 1911 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 11, 2009 ஆம் ஆண்டு வரை ஹீமோடையாலிசிஸ் , செயற்கை இதயம் மற்றும் செயற்கை உறுப்புகளின் முழுத் துறையிலும் முன்னோடியாக திகழ்ந்தார். இவர் இரண்டாம் உலகப் போரின் போது சிறுநீரக செயலிழப்புக்கான டயாலிசிஸ் துறையில் தனது முக்கிய கண்டுபிடிப்புகளை செய்தார். கோல்ஃப் தனது சொந்த ஊரான லைடன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று அதன் மூலம் சிறுநீரக செயழிப்பிற்கான மருத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்து டயாலிசிஸ் சிகிச்சை முறையை கண்டுபிடித்தார்.
ரயிலை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |