First woman Governor of Tamil Nadu
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் நாட்டில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வது என்பது முக்கியமான ஓர் விஷயமாகும். அதிலும் நம் இந்தியாவில் எத்தனையோ பெண் சாதனையாளர்கள் இருக்கிறார்கள். அப்படி நம் நாட்டில் சாதனை படைத்த பெண்களை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
சரி நம் தமிழ்நாட்டிலும் எத்தனையோ பெண்கள் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி நம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால், அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளாலாம் வாங்க.
தமிழ்நாட்டின் சாதனை பெண்கள் பெயர்கள்
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்..?
நம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் ஃபாத்திமா பீவி என்பவர் ஆவர்.
இவர் 1995-ம் ஆண்டு குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அதாவது, ஜனவரி 25 ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, தமிழ்நாட்டின் ஆளுநராக ஃபாத்திமா பீவியை நியமனம் செய்தார்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் என்று வரலாற்றில் தன் பெயரைப் பதித்தார் ஃபாத்திமா பீவி.
அதுவும் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி இவரே. இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மட்டுமில்லாமல், ஆசியாவிலேயே உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்றும் போற்றப்படுகிறார். இன்னும் சொல்லப்போனால், உயர் நீதிமன்ற அளவிலும் முதன் முதலாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் நீதிபதியும் இவரே என்ற புகழை பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்
ஃபாத்திமா பீவி வாழ்க்கை வரலாறு:
ஃபாத்திமா பீவி அவர்கள், 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி அப்போதிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், பத்தனம்திட்டா என்ற ஊரில், அன்னவீட்டில் மீரா சாஹிபுக்கும் கதீஜா பீவிக்கும் மகளாகப் பிறந்தார்.
பின் தனது சொந்த ஊரிலேயே கத்தோலிக்கப் பள்ளியில் 1943-ல் உயர்நிலைக் கல்வி முடித்த ஃபாத்திமா பீவி அவர்கள், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், அதனை தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின் 1949 -ல் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார்.
அதன் பிறகு நவம்பர் 14 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். அவர் 1950 இல் பார் கவுன்சில் தேர்வில் முதலிடம் பெற்றார்.
பின் நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். பின்னர் 1997 முதல் 2001 வரை இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பணியாற்றினார்.
2023 ஆம் ஆண்டில், இரண்டாவது உயரிய விருதான கேரள பிரபா விருதைப் பெற்றார். அதனை தொடர்ந்து விருது பட்டியலில், அவருடைய மரணத்திற்குப் பின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்..
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |