தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் | Tamilnattin Mudhal Pen Maruthuvar
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் நாம் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவராக இருந்து பணியாற்றியவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது போன்ற கேள்வி பதில்கள் அரசு பொது தேர்வுகளான TNPSC, UPSC, IAS போன்ற தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. பொது தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க இப்பொழுது தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? மற்றும் அவர்கள் பற்றிய சில குறிப்புகளை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
விடை: தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ஆவார்கள்.
பிறப்பு:
- முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் நாராயண சாமி, தாயாரின் பெயர் சந்திரம்மாள் ஆவார். இவரின் சகோதரி சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் சகோதரன் தம்பி இராமையா ஆவர்.
திருமணம்:
- 1914-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துலட்சுமி ரெட்டிக்கும் சுந்தரரெட்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவருக்கு இரண்டு மகன்கள் இராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி. இராம்மோகன் என்பவர் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணிபுரிந்தார். கிருஷ்ணமூர்த்தி என்பவர் புற்றநோய் மருத்துவராக பணியாற்றினார்.
கல்வி:
- இளம் வயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை மருத்துவ கல்லூரியில் 1907-ம் ஆண்டு சேர்ந்து படித்தார். படிப்பில் சிறந்து விளங்கி தமிழகத்திலேயே முதல் பெண் மருத்துவராக 1912-ல் பட்டம் பெற்றார்.
சிறப்புகள் – Tamilnadu First Female Doctor in Tamil:
- சமூக பணியில் ஈடுபாடு கொண்ட முத்துலட்சுமி ரெட்டி அன்னிபெசன்ட் அவர்களின் பிரம்ம ஞான சபையை நடத்தி வந்தார். தமிழ், இசை, இயக்கம், தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டார்.
- ‘ஸ்திரீ தருமம் எனும் மாத இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.
- தாய்-சேய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சியை லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
- பிரான்சில் 1926-ம் ஆண்டு நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் அவர்கள் பெண்கள் ஆண்களுக்கு நிகராக முன்னேற வேண்டும், பெண்களை அடிமைகளாக நடத்த கூடாது என வலியுறுத்தினார்.
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக:
- பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்திய மாதர் சங்கத்தை தொடங்கினார். இதுவே இந்தியாவின் முதல் பெண்கள் இயக்கமாகும்.
- தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற சிறப்பு டாக்டர் முத்துலட்சுமியையே சேரும்.
- சட்டசபை துணை தலைவராக 1925-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியில் இருந்து 5 ஆண்டுகளில் தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களுக்கான சொத்துரிமை, பால்ய விவாகங்களை தடை செய்தல் போன்ற சட்டங்களை கொண்டு வந்தார்.
- ஆதரவற்ற குழந்தைகளை வளர்ப்பதற்காக அவ்வை இல்லம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
விருதுகள் – தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்:
- ஆல்டர் உமன் என்ற பட்டம் பெண்களின் சுதந்திரத்திற்காக போராடியவர் மற்றும் ஏழை எளிய மக்களுக்காக போராடியவர் என்பதற்காக கொடுக்கப்பட்டது.
- இவருடைய சேவையை பாராட்டி 1956-ம் ஆண்டு பத்ம விபூஷன் பட்டம் வழங்கப்பட்டது.
மறைவு:
- ஜூலை மாதம் 22-ம் தேதி 1968-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு 82 வயதில் மறைந்தார்
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்? |
மிக குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |