தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்? | Tamilnattin Mudhal Pen Muthalamaichar Name

Tamilnattin Mudhal Pen Muthalamaichar Name

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் | Tamilnattin Mudhal Pen Muthalamaichar Yaar

நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம் பதிவின் அன்பான வணக்கம். முதலமைச்சர் பதவி ஒரு நாட்டையே ஆளக்கூடிய மிகப்பெரிய பதவியாகும். நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பது அவர்களுடைய கடமையாகும். பொது அறிவு சம்பந்தமான கேள்வியானது வாழ்க்கை நடைமுறைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. தொடர்ந்து எங்கள் பதிவை பார்வையிடுங்கள். போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவருக்கும் எங்கள் பொதுநலம் பதிவில் தினமும் பொது அறிவு சார்ந்த வினா விடைகளை பதிவு செய்து வருகிறோம். படித்து தேர்வில் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள்..

மிகக் குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன?

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?:

விடை: தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் புரட்சி தலைவரின் மனைவியான ஜானகி இராமச்சந்திரன்

ஜானகி இராமச்சந்திரன் பற்றிய சிறு குறிப்பு:

முதல் பெண் முதலமைச்சராக ஜானகி அவர்கள் வெறும் 24 நாட்கள் மட்டுமே பதவி ஏற்றுள்ளார். வைக்கம் நாராயணி ஜானகி என்றால் நம்மில் பலருக்கு தெரியாது, ஆனால் வி.என்.ஜானகி என்றால் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தெரியும்.

கே.சுப்ரமணியம் இயக்கிய இன்பசாகரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதலில் தடம் பதித்தார். தொடர்ந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த ஜானகி சகட யோகம் என்ற திரைப்படத்தில் கதையின் நாயகியாக தோன்றினார். 1947-ம் ஆண்டு வெளிவந்த ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி வாயிலாக முன்னணி நடிகையானார்.

1948-ல் வெளிவந்த ராஜ முக்தி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் உடன் நடிக்கும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது. அதே ஆண்டில் வெளியான மோகினி படத்தில் இருவருக்கும் காதல் தோன்றியது. பின்னர் படத்துறையில் நடிப்பதை நிறுத்தி ஜானகி, எம்.ஜி.ஆர்-ஐ திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கைத் துணையானார்.

நாட்டின் முதல் பெண் கவர்னர் யார்?

 

எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு உடலில் நோய்வாய்பட்ட போது, முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையிலும் அவர் அருகிலிருந்து கவனித்து அவரை மீட்டுக் கொண்டு வந்தவர் ஜானகி.

1987 டிசம்பர் 24-ல், எம்.ஜி.ஆரின் மறைவு தமிழர்களை நிலைகுலைய வைத்தது. தொடர்ந்து ஆளுநர் குரானாவின் அழைப்பை ஏற்று, முதலமைச்சராக பதவி ஏற்றார் ஜானகி அம்மையார். தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil