Who Was The First Woman President of India
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்..? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதனை படைத்து வருகிறார்கள். பெண்கள் அடிமையாக இருந்த காலம் மாறி தற்போது, எல்லா துறைகளிலும் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த அளவிற்கு பெண்கள் வளர்ச்சி அடைவதற்கு, முதன் முதலில் சாதனை படைத்த பெண்களும் ஒரு முக்கிய காரணம். அவர்களை ஒரு முன்னோடியாக எடுத்துக்கொண்டு இந்த காலத்தில் பல பெண்கள் சாதித்து வருகிறார்கள்.
நாட்டை ஆளும் அளவிற்கு பெண்களும் தகுதியானவர்கள் என்பதை நிருபிற்கும் வகையில் பல பெண்கள் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள். அந்த வகையில் இந்திய நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி யார்.? என்பதை பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி:
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி Pratibha Devisingh Patil (பிரதீபா தேவிசிங் பாட்டீல்) ஆவார். இவர், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2007 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி பதியேற்றார். இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராகவும் திகழ்ந்தவர். Pratibha Devisingh Patil இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் ராஜஸ்தானின் முதல் பெண் கவர்னரும் இவரே ஆவார்.
பதவி ஆண்டு:
Pratibha Devisingh Patil அவர்கள் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதிவு வகித்தார். இந்திய குடியரசுத் தலைவர் பதவியை பெற்ற முதல் பெண் என்ற வரலாற்றை பிரதீபா பாட்டீல் படைத்தார்.
இந்திய குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல்
பிரதீபா தேவிசிங் பாட்டீல், மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கோன் மாவட்டத்தில் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். அதன் பிறகு, 1962 ஆம் ஆண்டில் அதாவது, 27 வயதில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
அரசியல் வாழ்க்கை:
பிரதீபா தேவிசிங் பாட்டீல், அவர்கள், 1991 ஆம் ஆண்டில் அமராவதி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாட்டீல் மக்களவையில் ஒரு இடத்தைப் பெற்றார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அவர் செய்த தொண்டுகள் அவரது அரசியல் வாழ்க்கையை மேலும், உயர்த்தியது.
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |