இந்திய குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல் 2023

Kudiyarasu Thalaivar Name

இந்திய குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல் 2023 | Kudiyarasu Thalaivar Name

Kudiyarasu Thalaivar Name:- வணக்கம் நண்பர்களே.. இந்த பதிவில் இந்திய குடியரசு தலைவர் பெயர்களை நாம் தெரிந்து கொள்வோம். இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார்.

இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரி வாங்க இந்திய குடியரசு தலைவர்கள் பெயர்களும் அவர்கள் ஆட்சி செய்த காலம் வரிசை முதலியன இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். படித்து பயன்பெறுங்கள்..

 இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்திய குடியரசு தலைவர் பெயர் என்ன 2022 | Indian president tamil

திரு. ராஜேந்திர பிரசாத்:

Kudiyarasu Thalaivar Name: திரு. ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். 1950-1962 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் திரு. ராஜேந்திர பிரசாத் ஆவர். இலக்கியத்தில் நோபல் பரிசுக்கு பதினைந்து தடவைகள் பரிந்துரைக்கப்பட்டார். 11 முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.


திரு. சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்:

திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

Kudiyarasu Thalaivar Name: சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவர். இவர் குடியரசு தலைவராக 1962-1967 வரை ஆட்சி செய்தார். 1962-ல் இருந்து அவரது பிறந்த நாள் செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.


திரு. ஜாகிர் ஹுசைன்:

திரு. ஜாகிர் ஹுசைன்

ஜாகிர் ஹுசைன் இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராக அழைக்கப்படுகிறார். திரு. திரு. ஜாகிர் ஹுசைன் என்பவர் 1967 முதல் 1969 ஆம் ஆண்டு வரை இந்திய குடியரசு தலைவராக பணிபுரிந்தார். இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமை மிக்க நிர்வாகியாகவும் விளங்கியவர். இவர் இந்தியாவின் முதல் முஸ்லீம் ஜனாதிபதி ஆவார்.


திரு. வரககிரி வெங்கட கிரி:

வி. வி. கிரி என்றழைக்கப்பெற்ற திரு. வரககிரி வெங்கட கிரி இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார். 1969-1974 ஆண்டுகள் வரை குடியரசு தலைவராக பணியாற்றியவர். இந்தியாவின் பொறுப்பு ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பணியாற்றிய முதல் நபர்.


திரு. பக்ருதின் அலி அஹமத்:

பக்ருதின் அலி அகமது

Kudiyarasu Thalaivar Name: பக்ருதின் அலி அகமது என்பவர் இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக 1974 முதல் 1977 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். “உள்நாட்டு இடையூறு” என்னும் அவசரகாலத்தின் போது அவர் ஜனாதிபதியாக இருந்தார்.


திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி:

நீலம் சஞ்சீவ ரெட்டி இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977 இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964 இலும் முதலமைச்சராக இருந்தார். 1977 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி லோக் சபாவின் சபாநாயகராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


திரு. ஜெயில் சிங்:

ஜெயில் சிங்

Kudiyarasu Thalaivar Name: ஜெயில் சிங் 1982 முதல் 1987 வரை இந்தியாவின் ஏழாவது குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் எனப் பல பதவிகளில் இருந்து செயல்பட்டவர். மாநிலத்தின் சுதந்திர போராளிகளுக்காக வாழ்நாள் ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்.


திரு. ராமஸ்வாமி வெங்கடராமன்:

திரு. ராமஸ்வாமி வெங்கடராமன்

Indian president tamil:- இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர். பாக்கிஸ்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார். வெங்கடராமன் 1967 இல் யூனியன் திட்டமிடல் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


திரு. சங்கர் தயால் ஷர்மா:-

சங்கர் தயாள் சர்மா

Indian president tamil:- சங்கர் தயாள் சர்மா இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992-யில் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.  1952 இல், சர்மா போபால் மாநிலத்தின் முதலமைச்சராக ஆனார் மற்றும் சிறிய வயதில் முதலமைச்சராக இருந்தவர். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு வரை அவர் அந்த பதவியில் பணியாற்றினார்.

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா..?

திரு. கோச்சேரி ராமன் நாராயணன்:

கே. ஆர். நாராயணன்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளி ஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். இந்திரா காந்தியின் வேண்டுகோளின்படி அரசியலில் நுழைந்த நாராயணன் 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் காங்கிரசில் உள்ள பாலக்காடு தொகுதியில் ஓட்டப்பாளம் தொகுதியில் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1997-2002 வரை குடியரசு தலைவராக  பணியாற்றியவர்.


திரு. அவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்:

Abdul Kalam

Indian president tamil:- பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். 2002-2007 வரை குடியரசு தலைவராக பணியாற்றியவர். அவர் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார். நவம்பர் 21, 1963 அன்று தானே வடிவமைத்த ஏவுகணையை அனுப்பினார்.


திருமதி. பிரதீபா பாட்டில்:

திருமதி. பிரதீபா பாட்டில்

இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதீபா பாட்டில் ஆவர். 2007ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை குடியரசு தலைவராக பணியாற்றியவர். இவர் நம் இந்திய நாட்டின் 12-வது குடியரசு தலைவர் ஆவர். மேலும் இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார். ராஜஸ்தான் முதல் பெண் கவர்னர் ஆவார்.


திரு. பிரணாப் முகர்ஜி:-

திரு. பிரணாப் முகர்ஜி

திரு. பிரணாப் முகர்ஜி என்பவர் இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். 1973 ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் தொழில் துறை மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1975-77 இன் சர்ச்சைக்குரிய உள்நாட்டு அவசர காலத்தில் இந்திய அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி செயல்பட்டார்.


திரு. ராம் நாத் கோவிந்த்:

திரு. ராம் நாத் கோவிந்த்

திரு. ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராவர். இவர் 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை குடியரசு தலைவராக பணியாற்றி வருகிறார். ஏப்ரல் 1994 ல் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி. ஆனார். மார்ச் 2006 வரை அவர் தொடர்ச்சியாக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.


திரௌபதி முர்மு:

திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவர். சார்க்கண்டு மேனாள் ஆளுநர் ஆவர். ஜூன் 2022-ல், பாஜக முர்முவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக, 2022 குடியரசுத் தேர்தலுக்கான வேட்பாளராகப் பரிந்துரைத்தது. தற்போதைய நிலவரப்படி, இவர் இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 25 ஜூலை 2022 அன்று பதவியேற்பார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடி அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவராவார்.

பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்?
இந்தியாவின் முதல் சபாநாயகர்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil