பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

Poojiyathai Kandupidithavar

Poojiyathai Kandupidithavar

பொதுநலம்.காம் நண்பர்களுக்கு எங்களது அன்பான வணக்கம். தொடர்ந்து நமது பதிவில் பலவகையான பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்கள் பதிவு செய்து வருகின்றோம். பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தது. நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கும் அடிப்படையானதாக விளங்குகிறது பூஜ்ஜியம். இந்த பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்..

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார்?

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் இந்தியர்கள் தான். இன்றைய உலகில், உலகின் ஒவ்வொரு நகர்வுக்கும் அடிப்படையாக திகழ்வது பூஜ்ஜியம். பூஜ்ஜியத்திற்கு இடமதிப்பு சிந்தனையை முதன் முதலில் கொடுத்தவர் இந்தியாவில் வாழ்ந்த முதல் ஆர்யபட்டர் ஆவார். அதுமட்டுமல்ல, அடிப்படை கணித வாய்ப்பாடுகளான a 0=a, a-0=a, 0 0=0, ax0=0, 0/a=0 என்ற சமன்பாடுகளை முதன் முதலில் வழங்கியவர் மற்றொரு இந்திய கணித மேதை பிரம்மகுப்தர் ஆவார்.

அந்தப் பூஜ்ஜியம் இல்லை என்றால் என்னவாகும். ஒன்றுமில்லை என்பதை ஒன்றுமில்லை எனக் கூற முடியாது. ஒன்றுமில்லை எனக் கூறினால் ஒன்று இருப்பது எனப் பொருள். இல்லையென்று சொன்னாலே இருந்த ஒன்று இப்போது இல்லை என்றே கூறுகிறோம். ஒன்றுமில்லை என்றால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த பூஜ்ஜியம் இல்லை என ஒதுக்கிவிட்டால், எந்தக் கணக்கையும் போட முடியாது. ஆர்யபட்டர் காலத்திற்கு முன்பு உன்னை சூனியம், வெறுமை, இல்லாமை, சைபர் போன்ற பல்வேறு பெயர்களில் பல குடியினர் பயன்படுத்தியுள்ளனர். எது எப்படியே பூஜ்ஜியத்திற்கு எண் என்ற அந்தஸ்த்தை வழங்கிவர்கள் இந்தியர்களே.

குறிப்பு:

பூஜ்ஜியத்திற்கு பயன்படுத்தும் வட்ட குறியீடு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. இதையே நாம் இன்று வரை பயன்படுத்துகிறோம்.

பத்திரிகை துறையின் உயரிய விருது

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil