தினமும் ஒரே டீ குடிக்காமல் ஒவ்வொரு நாளும் வித்தியசமாக டீ போட்டு குடியுங்கள்..!

Advertisement

இஞ்சி டீ போடுவது எப்படி..? – Tea Types in Tamil

நண்பர்களே வணக்கம்..! ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் டீ குடிப்பது தான் வழக்கம். ஆனால் அந்த டீ காலையில் நன்றாக இல்லாமல் இருந்தால் அவ்வளவு தான் அந்த நாள் நன்றாக இருக்காது. என்று டீ ரசிகர்கள் சொல்வார்கள். அந்த அளவிற்கு டீக்கு என்று தனி சுவையும் உள்ளது.

சிலருக்கு உடல் நல குறைவால் டீ குடிப்பதை நிறுத்திவிட்டு லெமன் டீ, இஞ்சி டீ என்று வேறு ஏதாவது டீ குடிக்க பரிந்துரை செய்வார்கள். ஆகவே அந்த டீ எப்போதும் ஒரே மாதிரி தான் போடவேண்டும் என்று நினைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் டீ போட்டு குடிப்பது வழக்கம். ஆனால் அப்படி செய்வது தவறு. ஆகவே ஒவ்வொரு நாளும் எப்படி டீ போடுவது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Tea Types in Tamil:

  • இஞ்சி டீ
  • லெமன் டீ
  • மசாலா டீ
  • ​திரிபலா டீ
  • பிளாக் டீ

 இஞ்சி டீ போடுவது எப்படி..?

inji tea benefits in tamil

முதலில் கடாயில் தேவையான அளவு பால் ஊற்றிக் கொள்ளவும். அதனை அடுப்பில் வைத்து அதனை கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்த பின்பு அதில் கொஞ்சம் டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். அடுத்து தேவையான அளவு இஞ்சி இடித்து அதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, அதன் பின்பு வடிகட்டி சர்க்கரை சேர்த்து காலையில் எடுத்து குடித்தால் அந்த நாளே சூப்பரா இருக்கும். அதை போல் இதனை தலை வலி இருக்கும் போது இதனை போட்டு குடித்தால் தலை வலி குறைவும்.

லெமன் டீ போடுவது எப்படி..?

lemon tea benefits

இருப்பதில் இந்த டீ தான் மிகவும் ஈசியாக செய்யலாம். அடுப்பை பற்றவைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் டீ தூள் போட்டு கொதிக்கவிடவும். அதில் எலுமிச்சை சாறு ஊற்றிக்கொள்ளவும். கடைசியாக சீனி சேர்த்து குடிக்கவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 டீயுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம் உங்களுக்கு தெரியுமா

கிரீன் டீ போடுவது எப்படி..?

green tea benefits

இந்த கிரீன் டீ உடல் எடையை குறைக்க உதவும் என்று பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் தேயிலை போட்டு கொதிக்கவிட்டு, அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். இது குடிப்பதற்கு கசப்பாக இருந்தால் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

 மசாலா டீ போடுவது எப்படி..?

மசாலா டீ போடுவது எப்படி

மசாலா டீ என்பது நிறைய பொருட்களை சேர்த்து குடிப்பது தான் மசாலா டீ ஆகும். இதனை குடிப்பதால் வைரஸ் தொற்று பாதிப்பு குறையும்.

இதற்கு தேவையான பொருள் இஞ்சி அல்லது சுக்கு, ஏலக்காய், இலவங்கம், பட்டை, மிளகு, ஜாதிக்காய் போன்றவற்றை பொடியாக்கி வைத்துகொள்ள வேண்டும். இதை டீத்தூளில் கலந்துவிடவும். அதனை பாலை கொதிவிட்டு அதில் சேர்த்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும்.

திரிபலா டீ போடுவது எப்படி..?

ஒரு கப் சூடான நீரில் திரிபலா சேர்த்து அது நிறம் மாறிய பின்பு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

பிளாக் டீ போடுவது எப்படி..?

நாம் எப்போதும் டீயில் பால் இல்லாமல், டீ அதில் கொஞ்சம் எலுமிச்சை சேர்த்து குடிப்பதால் உடலில் இருக்கும் நச்சு தன்மை குறையும்.

இந்த டீக்களை போல் இன்னும் நிறைய வகைகள் உள்ளது. புதினா டீ, துளசி டீ, தனியா டீ, சுக்கு டீ என்று நிறைய உள்ளது. ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான டீயை காலையில் போட்டு குடிப்பது இன்னும் நன்மையை உடலுக்கு அளிக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ காபி குடிக்க வேண்டும்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement