Grape Juice Side Effects in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள அதுவும் ஆரோக்கியம் பற்றிய தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும். அவற்றை அறிந்து கொண்ட பிறகு அதனை சாப்பிடுவது என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்துடன் இன்றைய பதிவில் திராட்சை பழ ஜூஸினை அதிகம் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Grape Juice குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
திராட்சை ஜூஸ் தீமைகள்:
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் திராட்சை. அப்படி நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய திராட்சை பழத்தின் ஜூஸினை அதிகம் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றிய முழு விவரங்களையும் இங்கு அறிந்து கொள்வோம்.
மற்ற பழங்களை போலவே திராட்சையிலும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. அதிக அளவிலான நார்ச்சத்துகளை சாப்பிட்டால் அதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
வயிற்று வலி ஏற்படுத்தும்:
பொதுவாக திராட்சையில் உள்ள சாலிசிலிக் அமிலம் உடலில் அதிகம் சேர்வதால் சில தீவிர விளைவுகளை உடலில் ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக திராட்சை பழ ஜூஸினை அதிகம் குடிப்பதால் இரைப்பையில் அழற்சி, வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடல் எடை கூடும்:
மாம்பழம் மற்றும் பலாப்பழத்தை போன்று திராட்சை பழத்திலும் அதிக கலோரிகள் உள்ளது. அதனால் திராட்சை பழ ஜூஸினை நாம் அதிகம் உட்கொள்வதால் நமது உடலில் கலோரிகள் அதிகமாகும்.
இதனால் நமது உடல் எடையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதே போல் திராட்சை பழத்தில் அதிகமாக கொழுப்புச் சத்தும் இருக்கிறது. இதனாலும் உங்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா
கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாது:
இந்த திராட்சையில் சக்தி வாய்ந்த ரெஸ்வெராட்ரோல் என்னும் பாலிபினைல் இருக்கிறது. இது கர்ப்பபை சுருக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் திராட்சையை பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
சரும அழற்சி ஏற்படுத்த கூடும்:
திராட்சையில் அதிக அளவு லிப்பிட் டிரான்ஸ் புரோட்டீன் உள்ளது. அதனால் இது சில சமயங்களில் சிலருக்கு சரும அழற்சியை ஏற்படுத்தி விடும். மேலும் இந்த திராட்சையின் தோல் பகுதியில் இயற்கையாகவே ஒரு வித மெழுகு போல் படிந்திருக்கும். இவை சரும அழற்சியை ஏற்படுத்தி விடும்.
சிறுநீரகப் பிரச்சனை ஏற்படும்:
திராட்சை பழச்சாற்றினை அதிகமாக பருகுவதால் அதிலுள்ள அமிலத் தன்மையினால் பல வகையான சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைகளுக்காக மருந்துகள் எடுத்து கொண்டிருந்தால் அந்த மருந்துகளை செயலிழக்க வைக்கும் பண்புகளும் திராட்சையில் உண்டு. அதனால் நீங்கள் இந்த திராட்சை பழச்சாற்றினை அதிகமாக பருகுவதை தவிர்க்கலாம்.
மக்கானாவை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |