Grape Juice குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
வணக்கம் அன்பான நேயர்களே..! இன்றைய பதிவில் திராட்சை ஜூஸில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். பொதுவாக நம்மில் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று திராட்சை. ஆனால் இந்த பழத்தை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டு குடிப்பதால் நமது உடலுக்கு மிகுந்த நன்மைகள் மற்றும் பல சத்துக்கள் கிடைக்கின்றன. அவை என்ன என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
திராட்சை ஜூஸில் உள்ள நன்மைகள்:
இப்பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரால் என்னும் வேதிப்பொருள் உடலில் உள்ள பல நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இதனை ஜூஸ் செய்து குடிப்பதால் உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக் அமிலத்தையும் நீக்க உதவுகின்றது. இதனால் இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவை சீருடன் செயல் பட உதவுகின்றது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ளது அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
தினமும் இந்த திராட்சை ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது. மேலும் ஆய்வு ஒன்றில், கருப்பு திராட்சையை ஜூஸ் போட்டு தொடர்ந்து குடித்து வருவதால் நோயெதிர்ப்பு மண்டலமே வலிமையடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாரடைப்பை தடுக்கின்ற திராட்சை ஜூஸ்:
பல ஆய்வுகளின் முடிவுகள் என்ன கூறுகிறது என்றால் ஒருவர் தினமும் திராட்சை பழத்தில் ஜூஸ் போட்டு குடித்து வருவதால் அவரின் இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது என்று கூறுகின்றது.
மெட்டபாலிசம் மேம்படும் :
பொதுவாக திராட்சை பழத்தில் ஜூஸ் போட்டு குடித்து வருவதால் அது நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இரத்த அழுத்தம்:
தினமும் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தான் காரணம். மேலும் திராட்சை ஜூஸ் தினமும் குடிப்பதால் இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது.
உடல் எடை குறைய:
திராட்சை ஜூஸ் நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய உதவுகிறது.
ஒற்றைத் தலைவலி:
தினமும் திராட்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வருவதால், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
இரத்தத்தை சுத்தமாக்கும்:
தினமும் திராட்சை ஜூஸை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றது, மேலும் உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |