மக்கானாவை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்கிறீர்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Makhana Benefits in Tamil

Makhana Benefits in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனமகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். அதாவது நாம் அனைவருமே பல வகையான உணவு பொருட்களை சாப்பிடுவோம். ஆனால் அவ்வாறு நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளால் நமக்கு  கிடைக்கும் பயன்கள் பற்றி நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் அதனை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்றால் அவர்களிடம் பதில் இருக்காது. அப்படி நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் மக்கான எனப்படும் தாமரை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதை தெரிஞ்சிக்காம இறாலை சாப்பிடாதீங்க

தாமரை விதை பயன்கள்:

Health Benefits of makhana

உடல் எடையை குறைக்க:

Health Benefits of makhana in tamil

உடல் எடை குறைக்க வேண்டும் என்று சிந்தனை செய்பவர்கள் நொறுக்கு தீனிகளை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அவர்களுக்கு இந்த தாமரை விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இந்த தாமரை விதைகளில் உள்ள அதிக அளவு புரோட்டீன் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் பயன்படும். மேலும் இதில் குறைவான கலோரிகளே உள்ளது.

இதயத்தை பலப்படுத்த:

Benefits of makhana in tamil

இந்த தாமரை விதைகளில் உள்ள குறைந்த அளவிலான சோடியம் மற்றும் அதிக அளவிலான பொட்டாசியம் என்பது அதிக இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கிறது.

மேலும் இதில் உள்ள மெக்னீசியம் ஆனது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை சீராக பராமரிக்க பயன்படுகிறது. இதனால் உங்கள் இதயம் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.

குளிர்ந்த தண்ணீர் குளியல் Vs சுடுதண்ணீர் குளியல் எது சிறந்தது

​சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது:

Makhana Health Benefits in Tamil

இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் உள்ளது. ஆரோக்கியமான இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது பெரும் பங்கினை கொண்டுள்ளன என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

அதனால் இதில் உள்ள கிளைசெமிக் ​சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுகிறது.

எலும்புகள் பலம் பெற:

Thamarai vithai benefits in tamil

இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் உள்ளது. இவை இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் ஆகும்.

அதனால் எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டு பிரச்சனை போன்றவற்றால்  பாதிக்கப்பட்டுருந்தால் அதனை சரி செய்ய உங்கள் உணவில் நீங்கள் இந்த மக்கானாக்களை சேர்த்து கொள்ளலாம்.

அஜீரண பிரச்சனையை சரிசெய்ய:

Thamarai vithai Health benefits in tamil

பொதுவாக பலருக்கும் அஜீரணக்கோளாறு என்பது அதிக அளவில் இருக்கும். அவர்கள் அனைவரும் இந்த மக்கானவை தினமும் தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

ஏனென்றால் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உங்களின் அஜீரண பிரச்சனைகளை போக்க உதவும்.

30 நாட்களில் 5 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்போ வாழைப்பழத்துடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க போதும்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil