வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்கு தெரியுமா?

Updated On: October 13, 2025 4:48 PM
Follow Us:
kalil karuppu kayiru benefits in tamil
---Advertisement---
Advertisement

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்.?

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் காலில் கருப்பு கயிறு கட்டுவதால் ஏற்படும் அவசியங்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பெரும்பாலும் இன்றைய காலகட்டங்களில் உள்ளவர்கள் எல்லாருமே காலில் கருப்பு கயிறை கட்டி வருகிறார்கள். இது சிலருக்கு எதற்காக கட்டுக்கிறோம் என்றே தெரியவில்லை. பெரும்பாலும் இந்த கயிறை பேஷன்காகவும் கட்டி கொள்கிறார்கள்.

எனவே, காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் தீய சக்திகள் மற்றும் திருஷ்டிக்கள் ஏற்படாமல் இருக்கவும்,எதிர்மறை ஆற்றலை தடுக்கவும் கருப்பு கயிறு காட்டப்படுகிறது. இது ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது.மேலும் கருப்பு கயிறு எதற்காக கட்டப்படுகிறது என்று  தெரிந்து கொள்ளலாம் வாங்க.

காலில் கருப்பு கயிறு கட்டுவது எதற்கு.?

கருப்பு என்பது திருஷ்டிக்கு உரியது அதனால் இந்த கருப்பு கயிறை காலில் கட்டுவதால் திருஷ்டிகள் படாது என்றும் நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகள் நெருங்காது என்றும் சொல்லப்படுகிறது.

இவை எதற்காக காலில் மட்டும் கட்டப்படுகிறது என்றால் பாதத்தில் தான் ஒவ்வொரு அதிபதிகளும் குடிகொள்வார்கள்  என்றும் சனி பகவான் கால் பகுதியில் இருப்பார்  என்றும் அவர் கருப்பு நிறத்தை உடையவர் என்பதால் கருப்பு கயிறு காலில் கட்டப்படுகிறது .

உடலில் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்காக  கட்டப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறிப்பாக வயதிற்கு வந்த பெண்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்காக கட்டப்படுகிறது.

நேர்மறை ஆற்றல் உடலில் தங்கிக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்மறை ஆற்றல்கள் குடிகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த கருப்பு கயிறு கட்டப்படுகிறது.

காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் நம் வாழ்வில் எதிர்மறையான ஆற்றலை தடுக்கிறது என்று நம்பப்படுகிறது.

இது தற்போது பேஷனாகவும் மாறி வருகிறது. பெண்கள் கருப்பு கயிறு காட்டுவதுடன் சேர்த்து லாக்கெட்டுகளையும் அணிந்து வருகின்றன.

கருப்பு கயிறு கட்டும் முறை:

இந்த கருப்பு கயிறை பெண்கள் இடது காலில் கட்டவேண்டும் என்றும் ஆண்கள் வலது காலில் கட்ட வேண்டும் என்று ஆன்மிகத்தில்  சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் கயிறை கட்டும்பொழுது முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும்.  அதாவது ஒற்றைப்படை எண்களை கொண்டு 3,5,7,9 என்ற எண்களை கொண்டு முடிச்சி போட்டு காலில் கட்ட வேண்டும்  என்று சொல்லப்படுகிறது. இதனை நண்பகலில் 12 மணிக்கு கட்டுவது நல்லது.

நவகிரகங்களின் ஆதிக்கம் படி ஒன்பது முடிச்சிகளுடன் காலில் கட்டுவது நல்லது.

இந்த கயிறை ஞாயிற்று கிழமையில் கட்டுவது நல்லது என்றும் கூறுகிறார்கள். அப்படியில்லை என்றால் கோவில்களில் பூஜை செய்து வெள்ளி, செவ்வாய் கிழமையில் கட்ட வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

கயிறுகளில் முடிச்சி போடும் பொழுது ஓம் என்ற மந்திரத்தை சொல்லவேண்டும். அப்படியில்லை என்றால் இஷ்ட தெய்வங்களின் பெயர்களை சொல்லி முடிச்சி போட வேண்டும்.

இந்த கயிறை குறைந்தபட்சம் 48 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதன் பிறகு வேற கயிறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Abirami Baskar

Hello, I m Abirami working as Junior Content Writer in Pothunalam.com, I would like to write a topics based on the following categories such as Health Tips, Beauty Tips, Recipes, Home Improvements & Banking Tips.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now