இந்த ராசிக்காரர்கள் யார் காலிலும் விழுந்து வணங்க கூடாது..! இதில் உங்க ராசி இருக்கா..?

Kalil Vilunthu Vananga Koodatha Rasigal

Kalil Vilunthu Vananga Koodatha Rasigal

இன்றைய ஆன்மிகம் பதிவில் காலில் விழுந்து வணங்க கூடாத ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த காலகட்டம் எவ்வளவு தான் மாறி கொண்டே வந்தாலும் ஆன்மீகம் மாறாத ஒன்றாக இருக்கிறது. சிலர் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் பலரும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் தினமும் ஒரு ஆன்மீக தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே அந்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு செல்லக்கூடாதா..? இதில் உங்கள் ராசி உள்ளதா..?

காலில் விழுந்து வணங்க கூடாத ராசிக்காரர்கள் யார்..? 

காலில் விழுந்து வணங்க கூடாத ராசிக்காரர்கள் யார்

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை மாறாமல் இருக்கும் விஷயங்களில் இதுவும் ஓன்று. நாம் சிறுவயதில் இருந்தே பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வோம். எந்தவொரு நல்ல விஷயம் நடந்தாலும் நாம் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொள்வோம்.

பொதுவாக நமக்கு ஆசிர்வாதம் தரும் நபர் நம்மை விட 5 வயது பெரியவராக இருக்க வேண்டும்.  அதுபோல நாம் நம்முடைய தாத்தா, பாட்டி கால்களில் விழுந்து வணங்கினால் நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் ராகுகேதுவின் தோஷம் குறையும் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.  

நீங்கள் ஆசிர்வாதம் வாங்கும் நபர் வெளிநபராக இருந்தால் அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால் மட்டும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

 பொதுவாக பூசம், அனுஷம், உத்திரட்டாதி மற்றும் சனியின் ராசியில் பிறந்தவர்களும், மகரம், கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களும் அதேபோல மகரம், கும்பத்தில் சனி இருக்க பிறந்தவர்கள் மற்றும் சனி துலாம் ராசியில் அமையப் பெற்றவர்களும் சனியின் ஆதிக்கம் நிறைந்த ராசிக்காரர்களாக இருப்பார்களாம்.  

அதாவது, மகரம், கும்பம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த ராசிக்காரர்களாக இருப்பார்கள்.

அதனால் இந்த 3 ராசியில் பிறந்தவர்களும் மற்றவர்களின் காலில் விழுந்து வணங்குவதை தவிர்க்க வேண்டும். காரணம் இப்படி மற்றவர்களின் காலில் விழுந்து வணங்குவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய்விடும் என்று சொல்லப்படுகிறது.

இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோர்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பெரியவர்களை தவிர மற்றவர்களின் காலில் விழுந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல மற்றவர்கள் உங்கள் கால்களில் விழுவதை அனுமதிக்கவும் கூடாது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  திருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்