குரு பெயர்ச்சி பலன்கள் மகரம் 2021-2022
Guru Peyarchi 2021 Magaram: கோடிகளை கொடுக்கக்கூடிய கும்ப குரு பெயர்ச்சியானது ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு ராசிக்கும் பல நன்மைகளை கொடுக்கக்கூடியது. இதுவரை ஜென்ம குருவாக மகர ராசியில் இருந்து எவ்வித நற்பலன்களையும் தராத குரு பகவான் இப்பொழுது வாக்குஸ்தானமான கும்பத்திற்கு பெயர்ச்சியாக போகிறார். குரு பகவானால் கிடைக்க போகும் சாதகமான மற்றும் பாதகமான பலன்கள் இனி எப்படி மகர ராசிக்கு இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
Magaram Guru Peyarchi 2021 to 2022 in Tamil
மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது பொருளாதார வளர்ச்சி அபரிவிதமாக கிடைக்க போகிறது. குரு பகவான் காலச்சக்கரமான கும்பஸ்தானத்தில் இடம் பெயர்வதால் செல்வ செழிப்பு உயரும். நீங்கள் கொடுத்த வாக்குகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள்.
தொழில் – Makara Rasi Guru Peyarchi:
- தொழில் பொறுத்தவரை புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நிறைவேறும். தொழில் தொடர்பாக கடன் வாங்கியவர்கள் இப்பொழுது கடனை அடைப்பதற்கான சூழல் உண்டாகும். லாபம் அதிகரித்தாலும் சக வியாபாரிகளால் சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
வேலை – Magaram Guru Peyarchi 2021
- பணிமாற்றம் செய்ய விரும்புபவர்கள் இப்போது அதை செய்யலாம். புதிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பத்தாம் இடமான துலாம் ராசியில் குரு உங்களை பார்ப்பதால் பணியில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். செல்வாக்கு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
குடும்ப உறவு – Makara Rasi Guru Peyarchi 2021 to 2022:
- இரண்டாம் இடத்தில் குரு இருப்பதால் குடும்பத்தில் சண்டைகளும் சமாதானமும் சமமாக இருக்கும். பெற்றோர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். குடம்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிலர் சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குருவின் பார்வை 2-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் இதுவரை தடைபட்ட அனைத்து காரியங்களும் தடை இல்லாமல் நிறைவேறும்.
பொருளாதாரம் – Makara Rasi Guru Peyarchi 2021
- பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதே சமயம் பணவரவு நன்றாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். அதனால் வீண் செலவுகளை குறைத்து பணத்தை கவனமாக செலவு செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.
திருமணம் – Guru Peyarchi 2021 Magaram
- திருமணம் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். சிலருக்கு காதல் திருமணம் கைகூடும் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
கல்வி – Guru Peyarchi 2021 Makara Rasi
- மாணவர்களுக்கு 6, 8, 10 ஆகிய இடத்தில் இருப்பதால் பெரும் முயற்சிக்கு பிறகு தேர்வில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டு கல்வி, விரும்பிய கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இல்லத்தரசிகள்:
- இல்லத்தரசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களது பேச்சை கேட்பார்கள். மன அமைதி மற்றும் நிம்மதி கிடைக்கும்.
ஆரோக்கியம்:
- ஆரோக்கியம் பொறுத்தவரை நன்றாக இருக்கும். குடும்ப உறவினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்:
- திருவிடைமருதூருக்கு பக்கத்தில் உள்ள திருக்கஞ்சனூரில் இருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
- குழந்தை இல்லாத பெண்களுக்கு, ஆதரவற்ற மற்றும் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம் மற்றும் மன நிம்மதி கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |