யாருப்பா அந்த ராசிகாரர்..? நீங்களா..!
நண்பர்களே வணக்கம் இந்த பதிவுகளை படிக்கும்போதே ஒரு ஆர்வமுடன் படிப்பீர்கள்..! இன்னும் சிலர் நம்முடைய ராசி இதில் இருக்கிறதா என்று நினைத்து படிப்பீர்கள். என்னதான் சாமியை நம்பாமல் சிலர் இருந்தாலும் ஜாதகம் பொருத்தம் மற்றும் ஜாதக கட்டம் என்று நிறைய விஷயங்கள் உள்ளது. அது அனைத்தையும் மக்கள் அனைவரும் அதிகளவு நம்பி வருகிறார்கள். முக்கியமான திருமணம் நிச்சயம் செய்ய போகிறார்கள் என்றால் முக்கியமாக பார்ப்பது ஜாதகம். சிலருக்கு பொருத்தமானது சூப்பராக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்கிறார்கள். பொருத்தமானது 10 பொருத்தமும் இருந்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். அதேபோல் சில ராசியினருக்கு எப்படி பொருத்தம் இருந்தாலும் வீட்டில் இப்படித்தான் இருப்பார்கள் என்பது ஜாதகத்தில் வரும் கட்டங்கள் குறிப்பிட்டு சொல்லும் சிலருக்கு மனைவியிடம் அடங்கி செல்வார்கள் என்று சில ராசி உள்ளது அதனை பற்றி இப்போது பார்ப்போம் வாங்க..!
Most Dominant Female Zodiac Sign in Tamil:
மிதுன ராசி காதல் வாழ்க்கை:
மிதுன ராசிக்காரர்கள் திருமணம் செய்யும் பெண்களை அவர்களுக்கு ஒரு குறையும் வைக்க கூடாது என்ற மனநிலையை கொண்டவர்கள். இவர்கள் ஒருவரிடம் அன்பு வைத்தால் அவர்களிடம் எல்லா உரிமைகளையும் காதலிக்கும் போது வெளிப்படையாக இருப்பார்கள். ஆதலால் அவர்கள் தேவையில்லாத பழக்கவழக்கங்களில் சிக்கிக்கொள்வார்கள். மற்றவர்களின் ஆதிக்கத்தில் மாட்டிக்கொள்வார்கள். இப்படி தான் மிதுன ராசிக்காரர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்.
கடக ராசி திருமண வாழ்க்கை:
இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைக்க ஆசைப்படுவார்கள் அதேபோல் மற்றவர்களை சந்தோசமாக வைத்திருப்பார்கள். அதேபோல் மனைவியை மகிழ்ச்சியாக வைக்க அவர்களின் நிர்வாகத்தை பார்த்துக்கொள்வார்கள்.கடக ராசிக்காரர் அமைதியை விரும்புவதால் ஆதிக்கம் பெண்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அதன் படி விட்டுவிடுவார்கள்.
மகர ராசி எந்த ராசியை கவரும்:
நீங்கள் மகர ராசிக்காரர்கள் என்றால் உங்களுடைய திருமண வாழ்க்கையை மிகவும் முக்கியமாக எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் பாடுபடுவார்கள். கணவன் மனைவி உறவை வலுப்படுத்த எல்லாவற்றிலும் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். அதனால் அவர்களை ஆதிக்கம் செலுத்த விட்டுவிடுவார்கள்.
மீன ராசி எந்த ராசியை கவரும்:
மீன ராசிக்காரர் மிகவும் பாசம் உள்ளவர்கள். அதனால் அவர்களின் குடும்பத்தை மிகவும் பாசம் உள்ள குடும்பமாக மாற்றுவது தான். அதேபோல் வாழ்க்கைத்துணைக்கு நல்ல கணவனாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் மீன ராசிக்காரர்களின் மனைவி எந்த ஒரு விஷயத்தில் முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களை எதிர்த்து பதில் சொல்லவும் மாட்டார்கள். ஆகவே மனைவியை எதிர்த்து பேச மாட்டார்கள் இந்த ராசியினர் அனைவரும்.
இந்த மாதம் விருச்சிக ராசிக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் ⇒ விருச்சிக ராசிக்கார்களுக்கு இவ்வளவு நாட்கள் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்க போகிறது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |