வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

Advertisement

 அதிர்ஷ்டம் தரும் செடிகள்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே.! இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் பணவரவை அதிகரிக்க வளர்க்க வேண்டிய செடிகளை பற்றி தெரிந்து கொள்ளவோம். சிலர் வீட்டில் சம்பளத்தை வாங்கி வருவார்கள். ஆனால் அந்த சம்பளத்தால் எந்த வித முன்னேற்றமும் இருக்காது. வாங்கிய சம்பளம் இரண்டு மடங்காக ஆவதற்கு இந்த செடிகளை வீட்டில் வளருங்கள். வாங்க என்னென்ன செடிகள் என்று தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் செடி:

நெல்லிக்காய் செடி

நெல்லிக்காய் செடியை வீட்டில் வளர்த்தால் இருக்கின்ற செல்வதை விட மென்மேலும் அதிகரிக்கும். இந்த நெல்லிக்காய் செடியை வைத்தால் மட்டும் போதாது அதிலில் நெல்லிக்காய் பூத்து குலுங்க வேண்டும். இந்த நெல்லிக்காய் எப்படி காய்த்து இருக்கின்றதோ அது போல் உங்கள் வீட்டில் செல்வம் வளம் அதிகரிக்கும். நெல்லிக்காய் செடியை வாசலில் கிழக்கு திசையில் உள்ளவாறு வைக்க வேண்டும்.

சங்கு பூ:

சங்கு பூ

சங்கு பூ இரண்டு நிறமாக காணப்படும். அதில் நீல நிற சங்கு பூவை மட்டும் வளர்ப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். இந்த செடியை வீட்டின் வாசலில் வலது அல்லது இடது வளர்க்க வேண்டும்.

துளசி செடி:

துளசி செடி

துளசி செடியை மகாலட்சுமியின் உருவமாக பார்க்க படுகின்றது. ஆனால் இந்த துளசி செடியோடு கற்பூர வள்ளி செடியையும் சேர்த்து வைக்க வேண்டும். இந்த இரண்டு செடியையும் வாசல் அல்லது பின்புறத்திலும் வைக்கலாம். ஆனால் கிழக்கு திசை அல்லது வடக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். 

கற்றாழை செடி:

கற்றாழை செடி

நீங்கள் சாலையில் செல்லும் போது நிறைய வீடுகளில் வாசலில் கற்றாழை செடி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இப்படி வாசலில் வைப்பதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது. அதுமட்டுமில்லாமல் கண் திருஷ்டியை நீக்க கூடியது.

வாடாமல்லி செடி:

வாடாமல்லி செடி

வாடாமல்லி செடியை வளர்ப்பதால் இந்த பூ எப்படி வாடாமல் இருக்கின்றதோ அதே போல் அந்த வீட்டில் உள்ளவர்களும் கஷ்டம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இந்த செடியில் வெள்ளை பூவை தவிர மற்ற நிறம் உடைய செடிகளை வளர்க்கலாம்.

லக்கி மூங்கில் செடி:

லக்கி மூங்கில் செடி

இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் பண கஷ்டத்தை நீக்கி பண வரவை அதிகரிக்கும். இந்த செடியை வீட்டில் உள்ளே வளர்க்க வேண்டும். அதுவும் வட கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

மணி பிளான்ட் செடி:

மணி பிளான்ட் செடி

மணி பிளான்ட் செடி அதிகமான நபர்கள் வீட்டில் வைத்திருப்பார்கள். இந்த செடி பணவரவை அதிகப்படுத்தும். இந்த செடியை தென் கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

தொட்டால் சிணுங்கி செடி:

தொட்டால் சிணுங்கி செடி

இந்த செடியை சாலை ஓரத்தில் காணப்படும். வீட்டில் வளர்க்க மாட்டார்கள். இந்த செடியை வீட்டில் வளர்த்து செழிப்பாக வளர்ந்தால் அந்த வீட்டிலும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

வாசனை உள்ள பூ செடிகள்:

வாசனை உள்ள செடிகள்

வீட்டில் வாசனை உள்ள பூ செடியை எதாவது ஒன்றை கட்டாயம் வளர்த்து வாருங்கள். வாசனை நிறைந்த பூ செடியில் லட்சுமி தேவி குடியிருப்பாள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement