வீட்டில் பணம், காசு புழங்க இதை மட்டும் செய்து பாருங்கள்..!

Advertisement

வீட்டில் பணம், காசு புழங்க பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள்..!

பொதுவாக நமது வீட்டில் உள்ள பூஜை அறையில் சில விஷயங்களி நாம் சரியாக பின்பற்றினாலே நமது வீடு சுபிட்சமாக இருக்கும். நமது வீட்டில் மகாலட்சுமியின் முழுமையாக கிடைக்க பூஜை அறை மற்றும் பூஜை அறையில் உள்ள பொருட்கள் மிகவும் சுத்தமாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் வீட்டில் வீண் விரயம் அடிக்கடி வராமல் இருக்க, பணம் காசு அதிகம் புழங்க பூஜை அறையில் செய்ய வேண்டிய விஷயத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

வீட்டில் பணம், காசு புழங்க பூஜை அறை டிப்ஸ்:

டிப்ஸ்: 1

பூஜை பொருட்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவை! விளக்கு ஏற்றி வைத்து விட்டு அதில் எண்ணெயை தேங்க விடக் கூடாது. அதே போல எண்ணெய் முற்றிலுமாக தீர்ந்து, திரி கருகவும் கூடாது. இதனால் வீட்டில் பணம் காசு புழங்குவது குறையும். ஏற்றிய விளக்கை சரியான முறையில் அணைத்து அதை புஷ்பம் அல்லது பேப்பர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அப்பொழுது தான் புதிய எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற முடியும்.

டிப்ஸ்: 2

வீட்டில் பணம் காசு அதிகம் புழங்க பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் மிகவும் முக்கியம். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் மூலமாகத் தான் இறைவன் நம்முடைய வேண்டுதல்களை கேட்பதாக ஒரு ஐதீகம் உண்டு பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருக்கிறது. பூஜை அறையில் பஞ்ச பூதங்களும் அடங்கி இருக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்காமல் விளக்கு ஏற்றக் கூடாது. பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரை தினமும் மாற்றி விட வேண்டும்.

டிப்ஸ்: 3

பூஜை அறையில் வாசனை மிகுந்த மலர்களை விளக்குகளுக்கு மற்றும் சாமி புகைப்படங்களுக்கு வைத்து வழிபட வேண்டும்.

டிப்ஸ்: 4

உங்கள் வீட்டில் குபேரர் சிலை அல்லது புகைப்படம் இருந்தால் கண்டிப்பாக அதற்கு அடிப்பகுதியில் காசு அல்லது பந்தை வைத்து வழிபட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 நினைத்தது நிறைவேற கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!

டிப்ஸ்: 5

வீட்டில் அன்னபூரணி அம்மனின் சிலை இருந்தால் ஒரு தாம்பாளத்தில் அல்லது மரப்பலகையிலோ பச்சரிசியை வைத்து அதன்மேல் அன்னபூரணியை அமர வைக்க வேண்டும். அன்னபூரணியின் படம் உங்கள் வீட்டில் இருந்தால், சமையல் அறையில் வைத்து வழிபடுவது சிறந்தது. அன்னபூரணியை நாம் வைத்திருக்கும் தாம்பூலத்தில் ஒரு ரூபாய் நாணயத்தையும், ஒரு மஞ்சள் கிழங்கையும் வைப்பது நல்லது. தினமும் பூ வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நம் வீட்டில் வைத்து வழிபடும் விக்கிரகங்களுக்கு வஸ்திரம் இல்லாமல் வழிபடக் கூடாது. நம் வீட்டில் உள்ள அன்னத்தை, இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுக்கும் போது தான் நம் வீட்டில் அன்னபூரணி நிரந்தரமாக தங்குவாள் என்பது நிச்சயமான உண்மை.

மேல் கூறப்பட்டுள்ளது போல் நீங்கள் வழிபாடுதான் மூலம் உங்கள் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கும், பணம், காசு புழங்கிக்கொண்டே இருக்கும்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement