பௌர்ணமி சிறப்புகள் | Pournami Sirappu in Tamil

Advertisement

பௌர்ணமி அன்று என்ன செய்யலாம்? | Pournami Andru Enna Seiya Vendum

பழங்காலத்தில் இருந்தே பௌர்ணமி வழிபாடு என்பது மிகவும் விமர்சையான நாளாக உள்ளது. நம் முன்னோர்கள் வழிப்பட்ட ஒவ்வொரு நாட்களுமே ஒவ்வொரு நன்மையையும், நமக்கு வருகின்ற தீமைகளிடம் இருந்து பாதுகாப்பதற்கான சக்தியாக உள்ளது. அப்படி வழிபடும் நாட்களில் ஒன்றுதான் பௌர்ணமி. நாம் இந்த தொகுப்பில் பௌர்ணமி (pournami sirappu in tamil) அன்று என்ன செய்ய வேண்டும், மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய பலன்களை படித்தறியலாம் வாங்க.

Pournami Sirappu in Tamil: பௌர்ணமி என்றால் என்ன?

  • ஆகாயத்தில் முழு நிலவு, முழுமதி அதிக வெளிச்சத்துடன் இருக்கும் சந்திர பகவானை தரிசிப்பது பௌர்ணமியாகும்.

பௌர்ணமி விரதம் இருக்கும் முறை:

  • இந்த நாளில் காலையில் இருந்து நோம்பிருந்து பௌர்ணமி பூஜையை முடித்துவிட்டு பின்பு சாப்பிட வேண்டும்.

பௌர்ணமி பலன்கள்:

  • ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு 15 நாட்கள் கழித்து பௌர்ணமி தினம் வரும். இந்த நாளில் பல பூஜைகள் செய்யப்படுகின்றன, இந்த பூஜையின் மூலம் மக்கள் அனைவரும் பலவிதமான நன்மைகளை பெறுகின்றன.
  • பௌர்ணமி பலன்கள்: உங்களுக்கு வாழ்வில் இருக்கும் துன்பங்கள் விலகி, சந்தோசமாக இருப்பதற்கு பௌர்ணமி தினத்தன்று தேவி மற்றும் அம்மனை வழிபடுவது நல்லது.
2024 ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள் நேரம்

பௌர்ணமி பூஜை செய்வது எப்படி?

  • பௌர்ணமி அன்று என்ன செய்யலாம்: புதிய வீடு, மனை ஆகியவற்றை பெற நினைப்பவர்கள் இந்நன்னாளில் விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபாடு செய்வது நல்லது.
  • மாங்கல்ய பாக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெறுவதற்கு பெண்கள் இல்லத்தில் விளக்கேற்றி, நெய்வேத்தியம் படைத்து, குங்குமம் அல்லது மஞ்சள் வைத்து இறைவனின் மந்திரங்களை 108 முறை சொல்லி வழிபடலாம்.
  • பௌர்ணமி அன்று பெண்கள் விரத முறை மேற்கொள்வது சிறப்பு. இந்த நாட்களில் தங்களது குலதெய்வத்தை வழிபட்டால் நீங்கள் மட்டுமின்றி உங்களது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து, மாலை அணிந்து, விளக்கேற்றி, பிரசாதம் படைத்து வழிபடலாம்.

பௌர்ணமி சிறப்பு:

  • தமிழ் மாதத்தில் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள அனைத்து மாதங்களிலும் பௌர்ணமி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபடுவது மிகவும் நல்லது.
  • pournami andru enna seiya vendum: சகல சௌபாக்கியங்களும் வீட்டில் கிடைக்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் கூட வழிபாடு செய்யலாம். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு பௌர்ணமி நிலவொளியில் அமர்ந்து சாப்பிடுவது நல்ல தீர்வாக அமையும்.
  • தமிழ் புத்தாண்டான முதல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. சித்ரகுப்தனை வழிபடும் நாள். சித்ரா பௌர்ணமி அன்று அம்மனை வழிபடுவதன் மூலம் திருமண தடை, குழந்தை பிறப்பதில் தாமதம் நீங்கி விரைவாக யோகத்தை பெற முடியும். சித்திரை நட்சத்திரத்தில் சித்ரா பௌர்ணமி வருவது மிகவும் சிறப்பானது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement