சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் கவனமா இருக்கணுமா.!

sani natchathiram palan in tamil

சனி நட்சத்திர பெயர்ச்சி

சனி ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சமீபத்தில் பெயர்ச்சியானார். இந்த நட்சத்திரத்தில் அவர் அக்டோபர் 17 வரை இருக்கிறார். சனியின் இந்த மாற்றத்தினால் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருந்தாலும் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதவி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

மீனம்:

மீனம் ராசி

சனியின் மாற்றம் மீனம் ராசிக்காரர்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது. இப்போது மீனா ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. இந்த நிலையில் அக்டொபர் மாதம் வரைக்கும் உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதிநிலைமை ரொம்ப மோசமானதாக இருக்கும். சம்பாதிக்கின்ற பணம் எப்படி செலவாகிறது என்றே தெரியாது அந்த அளவிற்கு பணம் காலியாகும். துணையிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். இருவருக்கிடையில் சண்டைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

கும்பம்:

கும்பம் ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு அக்டொபர் மாதம் வரை எந்த முடிவையும் சரியான முறையில் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதனை சரி செய்வதற்காக செலவு செய்வீர்கள். வாழ்க்கை துணையிடம் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பணியில் பல தடைகள் ஏற்படும். அதனால் கவனமாக பணியாற்ற வேண்டும்.

மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொத்து சம்மந்தப்ட்ட பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் உடனே கவனிக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளில் நீங்கள் சென்று தலையிடாதீர்கள்.

கன்னி:

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் வாழ்வில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக நிதி விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சொத்து ஏதும் வாங்க நினைத்தால் அதில் வெற்றி கிடைக்கும்.

கடகம்:

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் காணப்படும். நிதிநிலைமை பிரச்சனையினால் மன கவலையுடன் காணப்படுவீர்கள்.

100 வருடத்திற்கு பிறகு மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்