சனி பெயர்ச்சி பலன்கள் 2023
ஒவ்வொரு வருடமும் வருடக் கடைசி அல்லது முதலில் சனி பெயர்ச்சி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சனி பெயர்ச்சியினை தொடர்ந்து செவ்வாய் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி போன்றவற்றையும் வருகிறது. ஆனால் இவற்றை எல்லாம் விட சனி பெயர்ச்சி தான் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் சனி பகவான் நம்முடைய குணங்களை பொறுத்து தான் நமக்கு பலன்களை அளிப்பார் என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது வருடா வருடம் அவர் அவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பலன்களை அதற்கு ஏற்றவாறு அளிப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் 2023-ல் சனி பெயர்ச்சி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை அளித்து அதிர்ஷ்டம் பெற செய்ய போகிறார் என்று இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் அதில் உங்களுடைய ராசியும் உள்ளதா என்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ மார்ச் 15 முதல் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 6 ராசிகளுக்கு நிறைய பிரச்சனைகள் வர போகிறதாம்..
Sani Peyarchi Palangal 2023:
சனி பகவான் ஒவ்வொரு வருடமும் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி கொண்டே இருப்பார்கள். இதன் படி 2023 மார்ச் மாதம் வரக்கூடிய சனி பெயர்ச்சியின் போது சனி பகவான் அவருடைய சொந்த வீடான கும்ப ராசி சதய நட்சத்திரத்திற்குள் செல்கிறார்கள்.
இதன் விளைவாக 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளித்து வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த போகிறார்கள். அது என்னென்ன ராசி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தனுசு ராசி:
ராசியில் ஒன்பதாவது ராசி என்றால் அது தனுசு ராசி தான். இத்தகைய தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சனிபகவான் அதிர்ஷ்டத்தை அளித்த கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு உதவியாக உள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியாக நன்றாக வளர்ச்சி அடைவதற்கும் சனி பெயர்ச்சி ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைத்து விடும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
மகர ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்கள் மிகவும் பொற்காலமாக தான் உள்ளது. மேலும் வியாபாரத்தில் இது வரையிலும் காணாத நல்ல வளர்ச்சி காணப்படும். இதன் காரணமாக பண வரவு அதிகரித்தது மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
ரிஷிபம் ராசி:
காலச்சக்கரத்தில் உள்ள பதினெட்டு ராசிகளில் இரண்டாவது ராசியான ரிஷிப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக எதிர்பாராத முன்னேற்றங்கள் காணப்படும். அதுமட்டும் இல்லாமல் சனி பெயர்ச்சி காரணமாக பதவி உயர்வுகள் மற்றும் கடன் பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
சிம்ம ராசி:
சிம்ம ராசியின் 7-வது வீட்டில் சனி பகவான் பார்வை இடுகிறார். இந்த 7-வது வீடானது சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தை அளிக்க உள்ளது. அதுபோல நீங்கள் நினைத்த காரியம் விரைவில் கைக்கூடி நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆகையால் இந்த வருடம் வரக்கூடிய சனி பெயர்ச்சி உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்க உள்ளதாக இருக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ ஒரே ராசியில் மூன்று யோகங்கள் இணைவதால் திடீரென்று ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் இந்த ராசிகள் தானாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |