சனியின் வக்ர பெயர்ச்சி
வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருக்கிறதா..? இதென்ன கேள்வி என்று கேட்பீர்கள். உண்மை தான் இந்த தொழில்நுட்ப உலகிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அதுபோல ராசிகளில் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது சில ராசிகளுக்கு நன்மையை செய்யும். சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும்.
அதுபோல நீதிமான் சனி பகவான் கடந்த ஜனவரி மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூன் மாதம் வக்ரமாக உள்ளார். அதாவது, சனி பகவான் 2023 ஜூன் 17 ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியில் பின்னோக்கி பயணிக்கப்போகிறார். எனவே சனி பகவான் டிசம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு நிதி மேன்மை, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டத்தை வழங்குவார். அந்த ராசிக்காரர்கள் யார் என்று காணலாம் வாங்க..!
ராகு கேது பெயர்ச்சியினால் இவர்களுக்குகெல்லாம் கஷ்ட காலம்.. |
சனியின் வக்ர பெயர்ச்சி பலன்கள்:
தனுசு ராசி:
சனி பகவான் தனுசு ராசியின் 7 ஆம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். அதனால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு நன்மைகளையும், சந்தோஷங்களையும் பெற போகிறீர்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் இந்த நேரத்தில் நிறைவேறும். அரசு அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் விரைவில் வெற்றிகரமாக நடந்து முடியும்.
மிதுன ராசி:
சனி பகவான் மிதுன ராசிக்காரர்களின் 9 ஆம் வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி அடைய போகிறார். எனவே சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்க போகிறார். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு த்தேடி வரும். மிதுன ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இதுவரை வராத பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக வராமல் தடைபட்டு இருந்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். பணிகளில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
சனியில் உருவாகும்.. இந்த யோகம்.. யாருக்கு நல்ல மாற்றம்.. யாருக்கு அதிர்ஷ்டம். |
துலாம் ராசி:
துலாம் ராசியின் 5 ஆம் வீட்டில் சனி வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி நீங்கள் எதிர்பார்க்காத பலன்களை அள்ளிக் கொடுக்க போகிறது. வேலை தேடி கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்காத அளவிற்கு பணவரவு உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்து முடியும்.
சிம்ம ராசி:
சனி பகவான் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் வக்ரப் பெயர்ச்சி அடையப் போகிறார். அதனால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல நன்மைகள் நடக்கப்போகிறது. நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த வேலைகள், இந்த நேரத்தில் வெற்றிகரமாக நடந்து முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |