அருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு..!

சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு

அருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு – சதுரகிரி சிறப்பு (Sathuragiri temple history)..!

சதுரகிரி மகாலிங்கம் கோவில்: – இன்று நாம் ஆன்மிகம் பகுதியில் சதுரகிரி வரலாறு அதன் சிறப்பு அம்சங்கள் போன்றவரை தெரிந்து கொள்வோம் வாங்க.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு:-

மூலவர் சுந்தரமகாலிங்க சுவாமி
அம்மன்/தயார் ஆனந்தவல்லி
ஊர்  சதுரகிரி
மாவட்டம்  மதுரை
மாநிலம்  தமிழ்நாடு

சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு:-

Sathuragiri temple history – சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததை கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்து கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்ந்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத அந்த ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது.

கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா

இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் அந்த பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஓடிவிட்டது, அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதை பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு ரத்தம் வடிந்த இடத்தில் அடுக்கிலிருந்த செடிகளின் இலைகளை பிடிங்கி வைத்து கட்டினால் உடனே ரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன் இந்த இடத்தில் யாம் இங்கேயே தங்கயிருக்க விரும்புகிறோம்.

எனவே இங்கே கோவில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும். என்று சொல்லிவிட்டு லிங்கமாகி மறைந்துவிட்டார். இதை பச்சைமால் இப்பகுதி பெரியவர்களிடம் கூறி கோவில் ஒன்றை உருவாக்கி வழிபாடு செய்து வந்தனர். பின் கோரக்கர் சித்தர் போன்ற பல சித்தர்கள் இங்கு தங்கி பல சித்துக்கள் செய்ததாக கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

சதுரகிரி மகாலிங்கம் கோவில் – சிறப்பு:

சதுரகிரியில் சிவன் சுயம்புமூர்த்தியாக சற்று சாய்ந்த நிலையில் அனைவரும் அருள்பாலிக்கின்றார்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் – திருவிழாக்கள்:-

ஆடி அமாவாசை திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி மற்றும் தை அமாவாசை, மார்கழி மாத இதர அமாவாசை, பவுர்ணமி நாட்கள் போன்ற நாட்களில் விஷேசமாக இருக்கும்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் – பிராத்தனை:-

திருமணத்தடை, குழந்தைபாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள இறைவனை பிரதிக்கலாம். இங்குள்ள மூலிகைகளும் மற்றும் அருவி நீரும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொணட்து.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் – பெருமை:-

சதுரகிரி வரலாறு – கைலாயத்தில் சிவன் பார்வதிக்கு திருமணம் நடத்தபோது. அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கத்தை சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது.

அருளைவழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்திரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவு பகுதில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது சிவனை சித்தர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம்.

9 நவகிரகங்கள் சுற்றுலா..! முழுமையான தகவல்கள்..!

சதுரகிரி கோவில் திறக்கப்படும் நேரம்:

  • காலை 06.00 மணி முதல் 12.00 மணி வாரை.
  • மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ஆலையம் திறக்கப்படும்.
  • மற்றபடி விசேஷ நாட்களில் நடை திறக்கப்படும் நேரம் மாறுபடும்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் முகவரின்:

சதுரகிரி வரலாறு – அருள்மிகு சுந்தரமாகலிங்க சுவாமி திருக்கோவில், சதுரகிரி-625 705, மதுரை.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்