வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது..! உங்கள் ராசி இதில் இருக்கா..?

Updated On: March 1, 2023 11:39 AM
Follow Us:
sevvai peyarchi palangal 2023
---Advertisement---
Advertisement

Mars Transit 4 Zodiac Benefits in Tamil

இன்றைய ஆன்மிகம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் காண இருக்கின்றோம். அந்த காலத்தை விட இந்த காலம் எவ்வளவு மாறி இருந்தாலும் ஆன்மிகம் மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. காரணம் இன்றைய நிலையில் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகளில் சனி பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி போன்றவை ஏற்படும். அப்படி ஏற்படும் போது சில ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது. அது எந்த ராசி என்று பார்க்கலாம் வாங்க..!

சுக்கிரன் மாற்றத்தால் இந்த 3 ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

செவ்வாய் பெயர்ச்சி ராசி பலன்கள் 2023:

மங்களகாரகனான செவ்வாய் பகவான் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்து புதன் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். மார்ச் மாதத்தில் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்ட மழை பொழியப்போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்று இங்கு பார்க்கலாம்.

மேஷ ராசி:

மேஷ ராசி

குமார ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால் மேஷ ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளிதர போகிறது. மேஷ ராசியில் செவ்வாய் செல்வ வீட்டில் அமர்ந்து அதன் வீடாக இருக்கிறார். அதனால் இந்த ராசிக்காரர்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அதுபோல இந்த நேரத்தில் உங்களுக்கு பணவரவு அதிகாமாக இருக்கும். மேலும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசை நிறைவேறும்.

கடக ராசி:

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் குமார ஸ்தானத்தில் நுழைவது நல்ல பலன்களை தரப்போகிறது. கடக ராசிக்காரர்கள் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகத்தை தரும் நன்மையான இடத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ளார். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்களின் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதுபோல உங்களுடைய பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். மேலும் மார்ச் 12 ஆம் தேதிக்கு முன் நீங்கள் எந்த புதிய வேலையை தொடங்கினாலும் அது வெற்றிபெறும்.

குருவின் பார்வையினால் குழந்தை பாக்கியம் பெறும் இந்த 7 ராசிகள் மட்டும் தான்..!

சிம்ம ராசி:

சிம்ம ராசி

செவ்வாய் பகவான் குமார ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகளை அள்ளித்தர போகிறது. உங்கள் ஜாதகத்தில்  அதிர்ஷ்டம், மகிழ்ச்சியின் அதிபதியான செவ்வாய் பகவான் அமர்ந்திருக்கிறார். எனவே, உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் தேடிவரும்.  இந்த நேரத்தில் நீங்கள் தொடங்கும் அனைத்திலும் லாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பது பணவரவிற்கு சாதகமான பலன்களை தரும். செவ்வாய் ஏழாம் வீட்டில் இருப்பதால் உங்கள் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். செவ்வாய் பெயர்ச்சியால் உங்களின் மதிப்பும் மரியாதையும்  அதிகரிக்கும். இதனால் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்பு உங்களை தேடி வரும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய தொழிலை தொடங்கினால் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் எடுத்த அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

பிப்ரவரி 18 முதல் இந்த 3 ராசிக்கு அதிஷ்டம் தான்..! இதில் உங்கள் ராசி இருக்கா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now